நேசமணியாக நடித்த வடிவேலு பற்றி சமூக வலைதளங்களில் பரவி வரும் மீம்ஸ்களை தொடர்ந்து டி-சர்ட்டுகள் தயாரிப்பு
பிரண்ட்ஸ் திரைப் படத்தில் நேசமணியாக நடித்த நடிகர் வடிவேலு பற்றி சமூக வலைதளங்களில் வேகமாக பரவிய மீம்ஸ்களை தொடர்ந்து அது தொடர்பான டி-சர்ட்டுகள் தயாரிக்கப்படுகிறது. இதன் மூலம் வெளிநாட்டு ஆர்டர்களும் அதிகரித்துள்ளது.
திருப்பூர்,
நாடு முழுவதும் பெருநகரங்கள் முதல் குக்கிராமங்கள் வரை ஆண்ட்ராய்டு செல்போன் பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. குறிப்பாக வாட்ஸ்-அப், டுவிட்டர், பேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் மூழ்கி அதில் இருந்து மீள முடியாதவர்களையும் அதிக அளவில் காண முடிகிறது.
அந்த அளவுக்கு சமூக வலைதளங்களின் தாக்கம் பெருகி உள்ளது. சினிமா, அரசியல், விளையாட்டு, நகைச்சுவை, டிக்டாக் என எந்த துறையையும் சமூக வலைதளங்கள் விட்டு வைக்கவில்லை. இளைஞர்களும், இளம்பெண்கள் மட்டுமின்றி குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை சமூக வலைதளங்களுக்கு அடிமையாகி வருகின்றனர்.
அந்த வகையில் நடிகர் விஜய், நகைச்சுவை நடிகர் வடிவேலு ஆகியோர் நடித்த பிரண்ட்ஸ் திரைப்படம் தமிழகத்தில் வெற்றியடைந்தது. இதில் நேசமணி பெயரில் பெயிண்டர் கதாபாத்திரத்தில் நடித்த வடிவேலுவின் காமெடி, படத்தின் வெற்றிக்கு முக்கிய காரணமாக அமைந்தது. சமீப காலமாக தொலைக்காட்சி செய்தி சேனல்களில் அடிக்கடி அண்மை செய்தி வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்துவது போல தற்போது வடிவேலுவின் நேசமணி காமெடியை அண்மை செய்தியாக வெளியிடுவது போல மீம்ஸ் வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.
இதை உலகம் முழுவதும் தமிழர்கள் பார்த்து ரசிப்பதுடன், நண்பர்களுக்கும் பகிர்ந்து வருகின்றனர். அந்த வீடியோவில் வடிவேலுவின் தலையில் நகைச்சுவை நடிகர் ரமேஷ்கண்ணா எதிர்பாராதவிதமாக சுத்தியலை போடுவது போன்றும், இதனால் வடிவேலு மயங்கி கீழே விழுவதும் போன்றும் இருக்கும். இந்த காட்சி அனைவரையும் குலுங்கி குலுங்கி சிரிக்க வைப்பதுடன், ரசிக்கவும் வைத்துள்ளது. எனவே இதையே மையமாக வைத்து திருப்பூரை சேர்ந்த ஆன்லைன் ஆடை விற்பனையாளர் விமல் டி-சர்ட் தயாரித்து விற்பனையில் ஈடுபட்டார். அதற்கு நல்ல வரவேற்பு கிடைத்ததை தொடர்ந்து அதே படத்தில் சில காட்சிகளுடனும் மற்றும் வேறு திரைப்படங்களில் வடிவேலு காமெடி காட்சிகளை வைத்து டி-சர்ட் தயாரிப்பை அதிகரித்துள்ளார்.
அந்த டி-சர்ட்டுகளுக்கு உள்நாட்டில் அமோக வரவேற்பு கிடைத்ததை தொடர்ந்து, வெளிநாட்டு ஆர்டர்களும் அதிகரித்து வருகிறது. மேலும் நேசமணி கதாபாத்திரத்தை தொடர்பு படுத்தி வடிவேலு நடித்த மற்ற திரைப்படத்தின் நகைச்சுவை காட்சிகளை இணைத்து மீம்ஸ்களையும், வீடியோக்களையும் நெட்டிசன்கள் அதிக அளவில் பரப்பி வருகின்றனர்.
இதுகுறித்து நேசமணி கதாபாத்திர மீம்ஸ் ஆடை தயாரிப்பாளர் விமல் கூறியதாவது:-
திருப்பூரில் இருந்து பல ஆண்டுகளாக ஆன்-லைன் மூலமாக ஆடைகள் விற்பனையில் ஈடுபட்டு வருகிறேன். முற்றிலுமாக ஆன்லைன் வர்த்தகத்தில் ஈடுபட்டு வரும் நான் அதில் வரும் வித்தியாசமான மீம்ஸ்கள் மற்றும் கருத்து படங்களை வைத்து டி-சர்ட் தயாரிப்பது குறித்து யோசித்தேன். இந்த நிலையில் கடந்த 2 நாட்களாக பேஸ்புக், வாட்ஸ்-அப், இன்ஸ்டாகிராம், டுவிட்டர் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் அதிகமாக பேசவும், பகிரவும் செய்யப்பட்ட வீடியோவாக வடிவேலுவின் நேசமணி காமெடி மீம்ஸ் வீடியோவை காண முடிந்தது.
இதையடுத்து உடனடியாக அந்த காட்சிகளை வைத்து டி-சர்ட் தயாரிக்க முடிவு செய்து, ஆன்லைன் மூலமாக விளம்பர படுத்தினேன். இதில் சென்னை, கோவை, நெல்லை, திருச்சி உள்பட தமிழகம் முழுவதும் இருந்து பெரிய வரவேற்பு கிடைத்ததுடன், ஏராளமான ஆர்டர்களும் கிடைத்தது. மேலும் துபாய், சவுதி உள்ளிட்ட வெளிநாடுகளில் இருந்தும் அதிகளவில் ஆர்டர்கள் வர தொடங்கி உள்ளன. அடுத்தடுத்த நாட்களில் ஆர்டர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கிறேன். அதற்கான முன்னேற்பாடுகளை செய்து வருகிறேன். இந்த டி-சர்ட்டுகள் காட்டன் மற்றும் பாலியஸ்டர் துணிகளை கொண்டு தயாரிக்கப்படுகிறது. இவ்வாறு அவர் கூறினார்.

Related Tags :
Next Story