என்ஜினீயரிங் படிப்பில் சேருவதற்கு 1 லட்சத்து 32 ஆயிரம் பேர் விண்ணப்பம் 3-ந்தேதி ரேண்டம் எண் ஒதுக்கீடு
என்ஜினீயரிங் படிப்பில் சேருவதற்கு ஒரு லட்சத்து 32 ஆயிரத்து 442 பேர் விண்ணப்பித்து இருக்கின்றனர். 3-ந்தேதி (திங்கட்கிழமை) ரேண்டம் எண் ஒதுக்கப்படுகிறது.
சென்னை,
பி.இ., பி.டெக். போன்ற என்ஜினீயரிங் படிப்புகளில் மாணவ-மாணவிகள் சேருவதற்கு ஆன்லைன் மூலம் விண்ணப்பங்களை பதிவு செய்ய அறிவுறுத்தப்பட்டு இருந்தனர். அதன்படி, கடந்த 2-ந்தேதி முதல் என்ஜினீயரிங் படிப்புகளில் சேருவதற்கு ஆன்லைனில் மாணவ-மாணவிகள் விண்ணப்பித்து வந்தனர்.
விண்ணப்பிப்பதற்கு கடைசி நாளாக 31-ந்தேதி (நேற்று) நிர்ணயிக்கப்பட்டு இருந்தது. அதன்படி கடைசி நாளான நேற்று இரவு 11.59 மணி வரை மாணவ-மாணவிகள் ஆர்வமுடன் விண்ணப்பத்தை பூர்த்தி செய்து சமர்ப்பித்தனர்.
நேற்று மாலை நிலவரப்படி 1 லட்சத்து 32 ஆயிரத்து 442 மாணவ-மாணவிகள் விண்ணப்பித்து இருப்பதாக தகவல்கள் வெளியாகின.
3-ந்தேதி (திங்கட்கிழமை) ரேண்டம் எண் ஒதுக்கப்பட இருக்கிறது. விண்ணப்பம் பூர்த்தி செய்யும்போது ஏதாவது ஒரு சேவை மையத்தை விண்ணப்பதாரர்கள் பதிவு செய்யவேண்டும் என்று ஏற்கனவே அறிவுறுத்தப்பட்டு இருந்தது. ஏனென்றால் அந்த சேவை மையங்களில் தான் சான்றிதழ் சரிபார்ப்பு நடைபெறும். சான்றிதழ் சரிபார்ப்பு பணிகள் வருகிற 6-ந்தேதி(வியாழக்கிழமை) முதல் 11-ந்தேதி(செவ்வாய்க்கிழமை) வரை அந்தந்த சேவை மையங்களில் நடைபெற இருக்கிறது.
பின்னர், வருகிற 17-ந்தேதி(திங்கட்கிழமை) ரேங்க் பட்டியல் வெளியிடப்பட இருக்கிறது. 20-ந்தேதி(வியாழக்கிழமை) முதல் கலந்தாய்வு தொடங்குகிறது. அன்றைய தினம் மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கும், 21-ந்தேதி முன்னாள் ராணுவ வீரர்களின் வாரிசுகளுக்கும், 22-ந்தேதி விளையாட்டு வீரர்களுக்கும் நேரடி சிறப்பு கலந்தாய்வு நடைபெறும்.
பொதுப்பிரிவினருக்கான கலந்தாய்வு ஜூலை மாதம் 3-ந்தேதி தொடங்கி 28-ந்தேதி வரை நடைபெறுகிறது. தொழிற்கல்வி பிரிவினருக்கான கலந்தாய்வு வருகிற 25-ந்தேதி தொடங்கி, 28-ந்தேதி வரை நடக்கிறது.

Related Tags :
Next Story