19 உயர் போலீஸ் அதிகாரிகள் இடமாற்றம்: சட்டம்-ஒழுங்கு கூடுதல் டி.ஜி.பி.யாக ஜெயந்த் முரளி நியமனம்


19 உயர் போலீஸ் அதிகாரிகள் இடமாற்றம்: சட்டம்-ஒழுங்கு கூடுதல் டி.ஜி.பி.யாக ஜெயந்த் முரளி நியமனம்
x
தினத்தந்தி 1 Jun 2019 5:19 AM IST (Updated: 1 Jun 2019 5:19 AM IST)
t-max-icont-min-icon

தமிழக சட்டம்-ஒழுங்கு கூடுதல் டி.ஜி.பி.யாக ஜெயந்த் முரளியும், பெண்களுக்கு எதிரான குற்றங்களை விசாரிக்கும் தனிப்பிரிவுக்கு கூடுதல் டி.ஜி.பி.யாக ரவியும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

சென்னை,

தமிழகத்தில் 19 உயர் போலீஸ் அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டனர். இதுதொடர்பாக தமிழக அரசு நேற்று வெளியிட்ட உத்தரவில் கூறியிருப்பதாவது:-

* தொழில்நுட்ப பிரிவு டி.ஜி.பி. தமிழ்செல்வன் தமிழ்நாடு மின்சார வாரிய தலைமை விஜிலென்ஸ் அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளார்.

* போக்குவரத்து மற்றும் சாலை பாதுகாப்பு டி.ஜி.பி. கரண் சின்ஹா மாநில குற்ற ஆவணக் காப்பக டி.ஜி.பி.யாக மாற்றப்பட்டார்.

* சென்னை மாநகர போக்குவரத்து கழக தலைமை விஜிலென்ஸ் அதிகாரியாக பணியாற்றிய ஜாங்கிட் கும்பகோணத்தில் உள்ள மாநில போக்குவரத்து கழக தலைமை விஜிலென்ஸ் அதிகாரியாக பொறுப்பு ஏற்பார். இந்த பதவி புதிதாக உருவாக்கப்பட்டது ஆகும்.

* தமிழக தேர்தல் பிரிவு டி.ஜி.பி. அசுதோஷ் சுக்லா, மண்டபம் அகதிகள் முகாம் சிறப்பு அதிகாரியாக பொறுப்பு ஏற்பார்.

* சட்டம்-ஒழுங்கு பிரிவு சிறப்பு டி.ஜி.பி.யாக பணியாற்றிய விஜய்குமார் லஞ்ச ஒழிப்பு பிரிவு இயக்குனராக நியமிக்கப்பட்டுள்ளார்.

* மாநில குற்ற ஆவணக் காப்பக கூடுதல் டி.ஜி.பி. சீமா அகர்வால், தலைமையக கூடுதல் டி.ஜி.பி.யாக பதவி ஏற்பார்.

* தலைமையக கூடுதல் டி.ஜி.பி. எம்.ரவி, பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களை விசாரிக்கும் தனி பிரிவு கூடுதல் டி.ஜி.பி.யாக நியமிக்கப்பட்டுள்ளார். இந்த பதவியில் இருந்த அருணாச்சலம் ஓய்வு பெற்றார்.

* ஆயுதப்படை கூடுதல் டி.ஜி.பி. ஷகீல் அக்தர், மாநில குற்றப்பிரிவு கூடுதல் டி.ஜி.பி.யாக மாற்றப்பட்டார்.

* மாநில குற்றப்பிரிவு கூடுதல் டி.ஜி.பி.யாக பணி புரிந்த ஆபாஷ் குமார் சிறைத்துறைக்கு மாற்றப்பட்டார்.

* ஈரோடு சிறப்பு அதிரடிப்படை கூடுதல் டி.ஜி.பி. சந்தீப் ராய் ரத்தோர் சீருடை பணியாளர் தேர்வாணையத்தின் உறுப்பினராக நியமிக்கப்பட்டுள்ளார்.

* சீருடை பணியாளர் தேர்வாணைய உறுப்பினராக பணியாற்றிய கூடுதல் டி.ஜி.பி. சுனில் குமார் தமிழ்நாடு கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் கூட்டமைப்பு தலைமை விஜிலென்ஸ் அதிகாரியாக பொறுப்பு ஏற்பார்.

* தமிழ்நாடு கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் கூட்டமைப்பு விஜிலென்ஸ் அதிகாரியாக பணியாற்றிய கூடுதல் டி.ஜி.பி. சங்கர் திவால், ஆயுதப்படை கூடுதல் டி.ஜி.பி.யாக மாற்றப்பட்டார்.

* சிறப்பு புலனாய்வு பிரிவு கூடுதல் டி.ஜி.பி. அசோக்குமார் தாஸ் தொழில்நுட்ப பிரிவு கூடுதல் டி.ஜி.பி.யாக பதவி ஏற்பார்.

* லஞ்ச ஒழிப்பு பிரிவு இயக்குனர் ஜெயந்த் முரளி தமிழக சட்டம்-ஒழுங்கு கூடுதல் டி.ஜி.பி.யாக நியமிக்கப்பட்டார்.

* காத்திருப்போர் பட்டியலில் இருந்த ஐ.ஜி. செந்தாமரைக்கண்ணன் தலைமையக ஐ.ஜி.யாக பொறுப்பு ஏற்பார்.

* சி.பி.சி.ஐ.டி. சிறப்பு பிரிவு சூப்பிரண்டு ராஜேஸ்வரி சிலை கடத்தல் தடுப்பு பிரிவு சூப்பிரண்டாக மாற்றப்பட்டார்.

* மண்டபம் அகதிகள் முகாம் சிறப்பு அதிகாரியாக பணியாற்றிய ஐ.ஜி. பிரமோத் குமார் போக்குவரத்து மற்றும் சாலை பாதுகாப்பு ஐ.ஜி.யாக பதவி ஏற்பார்.

* லஞ்ச ஒழிப்பு பிரிவு இணை இயக்குனர் முருகன் பொருளாதார குற்றப்பிரிவு ஐ.ஜி.யாக நியமிக்கப்பட்டுள்ளார். இந்த பதவியில் இருந்த மனோகரன் ஓய்வு பெற்றார்.

* வணிக குற்றப் புலனாய்வு சி.ஐ.டி. பிரிவு சூப்பிரண்டு ஜெயலட்சுமி பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களை விசாரிக்கும் சென்னை மாநகர துணை கமிஷனராக நியமிக்கப்பட்டுள்ளார். இது புதிய பதவி ஆகும்.

இவ்வாறு அரசு உத்தரவில் கூறப்பட்டுள்ளது.

Next Story