தமிழகத்தில் திட்டமிட்டபடி நாளை மறுநாள் பள்ளிகள் திறக்கப்படும் - அமைச்சர் செங்கோட்டையன்


தமிழகத்தில் திட்டமிட்டபடி நாளை மறுநாள் பள்ளிகள் திறக்கப்படும் - அமைச்சர் செங்கோட்டையன்
x
தினத்தந்தி 1 Jun 2019 1:57 PM IST (Updated: 1 Jun 2019 1:57 PM IST)
t-max-icont-min-icon

தமிழகத்தில் திட்டமிட்டபடி நாளை மறுநாள் பள்ளிகள் திறக்கப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.

 சென்னை,

தமிழகத்தில் பள்ளிகளுக்கான கோடை விடுமுறையானது ஜூன் 10ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக வாட்ஸ் ஆப் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் வதந்தி பரவியது.

இது குறித்து விளக்கம் அளித்துள்ள பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன், மாணவர்களின் நலனுக்கேற்ப தமிழக அரசு புதிய பாடத்திட்டங்களை மாற்றி அமைத்து இருப்பதாலும், 210 நாட்கள் வேலை நாட்களாக உள்ளதாலும், விடுமுறையை நீட்டிக்க வாய்ப்பில்லை என்றார். விடுமுறையை அதிகரிக்கும் பட்சத்தில், பாடத்தை முழுமையாக மாணவர்களிடத்தில் கொண்டு செல்ல முடியாது என்றும் அவர் விளக்கம் அளித்துள்ளார்.

Next Story