திருமண நிதி உதவிக்கான வருமான உச்ச வரம்பை ரூ.24 ஆயிரத்தில் இருந்து ரூ.72 ஆயிரமாக உயர்த்தி தமிழக அரசு உத்தரவு
திருமண நிதி உதவிக்கான வருமான உச்ச வரம்பு உயர்வு. ரூ.24 ஆயிரத்தில் இருந்து ரூ.72 ஆயிரமாக உயர்த்தி தமிழக அரசு உத்தரவிட்டு உள்ளது.
சென்னை,
தமிழக அரசின் சில திட்டங்களின் கீழ் விண்ணப்பிப்பவர்களுக்கு ஆண்டு வருமான உச்ச வரம்பை ரூ.24 ஆயிரத்தில் இருந்து ரூ.72 ஆயிரமாக உயர்த்தி முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டு உள்ளார்.
சமூக நலத்துறையின் கீழ் ஏழை விதவைகளின் குழந்தைகளுக்கு இலவச பாடநூல், குறிப்பேடுகள் வழங்கும் திட்டத்திற்கான ஆண்டு வருமான உச்ச வரம்பு ரூ.72 ஆயிரமாக உயர்த்தப்பட்டு உள்ளது
தொழில் கூட்டுறவு சங்கங்களில் அங்கத்தினர் அனுமதி, தையல் பயிற்சிகளில் சேர்க்கை, தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் மூலம் செயல்படும் சேவை இல்லங்களுக்கும் வருமான உச்ச வரம்பு உயர்வு அளிக்கப்பட்டு உள்ளது.
தொழிற்பயிற்சி நிலையங்களில் அனுமதி மற்றும் மூன்றாம் பாலினர் நலத்திட்ட உதவிகளுக்கும் வருமான உச்ச வரம்பு ரூ.72 ஆயிரமாக உயர்த்தப்பட்டு உள்ளது.
Related Tags :
Next Story