தமிழகத்தில் மாலை நேரத்தில், பலத்த காற்றுடன் மழைக்கு வாய்ப்பு
தமிழகத்தில் மாலை நேரத்தில், பலத்த காற்றுடன் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்து உள்ளது.
சென்னை
சென்னை வானிலை மையம் கூறி இருப்பதாவது:-
சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், வேலூர், திருவண்ணாமலை மாவட்டங்களில் அடுத்த இரண்டு நாட்களில் பகல் நேரங்களில் அனல் காற்று வீசக்கூடும். இந்த 5 மாவட்டங்களில் மாலை நேரத்தில், 30 முதல் 40 கிலோமீட்டர் வேகத்தில் காற்று மற்றும் இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்தில் ஓரிரு இடங்களில் லேசான முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது,
வெப்ப சலனம், வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக மழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் திருச்சியில் 4 சென்டிமீட்டர், உசிலம்பட்டியில் 3 சென்டிமீட்டர், அறந்தாங்கி, கொடைக்கானல், மதுரை விமான நிலையத்தில் தலா 2 சென்டிமீட்டர் மழை பதிவாகியுள்ளது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
Related Tags :
Next Story