மும்மொழித் திட்டம்: பாஜக அரசின் உண்மையான முகம் தெரியத் தொடங்கிவிட்டது - ப.சிதம்பரம் டுவீட்


மும்மொழித் திட்டம்: பாஜக அரசின் உண்மையான முகம் தெரியத் தொடங்கிவிட்டது - ப.சிதம்பரம் டுவீட்
x
தினத்தந்தி 1 Jun 2019 8:24 PM IST (Updated: 1 Jun 2019 8:24 PM IST)
t-max-icont-min-icon

பாஜக அரசின் உண்மையான முகம் தெரியத் தொடங்கிவிட்டது என்று ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.

சென்னை,

காங்கிரஸ் முன்னாள் மத்திய மந்திரி ப.சிதம்பரம் டுவிட்டரில் கூறியிருப்பதாவது:- 

பாஜக அரசின் உண்மையான முகம் தெரியத் தொடங்கிவிட்டது. புதிய கல்விக் கொள்கையில் பள்ளிகளில் முதல் வகுப்பிலிருந்தே மும்மொழித் திட்டம் என்று அறிவித்திருக்கிறார்கள்.  

பள்ளிகளில் மும்மொழித் திட்டம் என்றால் என்ன அர்த்தம்? இந்தி மொழியைக் கட்டாயப் பாடமாக்குவார்கள் என்று பொருள். இந்தி மொழி கட்டாயப் பாடம் என்றால் இந்தி திணிப்பு என்று பொருள். 

பாஜக தேர்தல் அறிக்கையிலேயே இந்தி திணிப்புக்கு கொடி அசைத்திருந்தார்கள் என்பதை நான் தேர்தலின் போதே சுட்டிக் காட்டியிருந்தேன். சமஸ்கிருத மொழியைப் பரப்புவோம் என்று பாஜக தேர்தல் அறிக்கையில் கூறப்பட்டது. 

இந்த முயற்சிக்கு தேர்தல் அறிக்கை சூட்டிய தலைப்பு -- பாரதிய மொழிக் கலாச்சாரம்! என பதிவிட்டுள்ளார்.

Next Story