மாநில செய்திகள்

‘தமிழகத்தில் வெப்பத்தின் தாக்கம் இன்று முதல் குறையும்’ வானிலை ஆய்வு மையம் தகவல் + "||" + Sun Heat in TamilNadu Will decrease today Weather Research Center Information

‘தமிழகத்தில் வெப்பத்தின் தாக்கம் இன்று முதல் குறையும்’ வானிலை ஆய்வு மையம் தகவல்

‘தமிழகத்தில் வெப்பத்தின் தாக்கம் இன்று முதல் குறையும்’ வானிலை ஆய்வு மையம் தகவல்
தமிழகத்தில் வெப்பத்தின் தாக்கம் இன்று (ஞாயிற்றுக்கிழமை) முதல் குறையும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருக்கிறது.
சென்னை,

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை பொய்த்து போனது. அதன் தொடர்ச்சியாக கோடைகாலம் தொடங்குவதற்கு முன்பே வெயிலின் கோரத்தாண்டவம் அதிகமாக இருந்தது. அவ்வப்போது சில இடங்களில் கோடை மழை பெய்தாலும், பெரிய அளவில் வெப்பத்தை தணிக்கவில்லை.


அக்னி நட்சத்திரம் கடந்த மாதம் (மே) 4-ந் தேதி தொடங்கி 28-ந் தேதியுடன் நிறைவு பெற்றது. அந்த காலங்களில் பல இடங்களில் 100 டிகிரியை தாண்டி வெயில் கொளுத்தியது. இந்த நிலையில் தமிழகத்தில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) முதல் வெப்பத்தின் தாக்கம் குறையும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருக்கிறது.

இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மைய அதிகாரிகள் கூறியதாவது:-
குமரி கடல் பகுதியை ஒட்டியுள்ள பகுதியில் கிழக்கு காற்று, தென் மேற்கு திசை நோக்கி 3 கிலோ மீட்டர் உயரத்துக்கு எழும்பும்போதும், கேரளாவில் தொடர்ந்து 3 நாட்களுக்கு 50 சதவீதம் மழை பெய்யும் போதும் தென்மேற்கு பருவமழை தொடங்கியதாக கணக்கில் கொள்ளப்படும். அதற்கான சூழ்நிலை உருவாக இன்னும் 2 நாட்கள் ஆகும். அதன் பிறகுதான் தென்மேற்கு பருவமழை பற்றி சொல்ல முடியும்.

அடுத்த 24 மணி நேரத்தில் (இன்று) வெப்பச்சலனம் காரணமாக, தமிழகத்தில் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள பகுதிகளிலும், சென்னையிலும் மழைக்கான வாய்ப்பு அதிகம் இருக்கிறது. கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், நாமக்கல், வேலூர், திருவண்ணாமலை மற்றும் ஈரோடு பகுதிகளில் கனமழைக்கான வாய்ப்பு உள்ளது.

வங்க கடலின் வளிமண்டலத்தில் மேலடுக்கு சுழற்சி ஒன்று உருவாகி இருக்கிறது. இதன் காரணமாக, காற்று தமிழகத்தின் உள்பகுதியை நோக்கி வரும். இதனால் தமிழகத்தில் நாளை (இன்று) முதல் வெப்பத்தின் தாக்கம் குறைய தொடங்கும். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

நேற்று காலை 8.30 மணியுடன் முடிவடைந்த 24 மணி நேரத்தில் தமிழகத்தில், கெட்டியில் 4 செ.மீ., உசிலம்பட்டியில் 3 செ.மீ., அறந்தாங்கி, கொடைக்கானல், மதுரை விமான நிலையத்தில் தலா 2 செ.மீ., பேரையூர், சிவகிரியில் தலா ஒரு செ.மீ. மழை பெய்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

1. தமிழகத்தில் 16 இடங்களில் ரூ.14 கோடியில் புதிய நீதிமன்றங்கள் சட்டசபையில் அமைச்சர் சி.வி.சண்முகம் அறிவிப்பு
தமிழகத்தில் 16 இடங்களில் ரூ.14 கோடியே 27 லட்சம் மதிப்பில் புதிதாக நீதிமன்றங்கள் அமைக்கப்படும் என்றும், சென்னை, தர்மபுரி, விழுப்புரத்தில் உள்ள அரசு சட்டக்கல்லூரிகளில் முதுகலை சட்டப்படிப்பு தொடங்கப்படும் என்றும் சட்டசபையில் அமைச்சர் சி.வி.சண்முகம் கூறினார்.
2. தமிழகத்தில் முதல்முறையாக சாதனை: ஒரே நாளில் 5,070 மெகாவாட் காற்றாலை மின்சாரம் உற்பத்தி
தமிழகத்தில் முதல் முறையாக காற்றாலைகள் மூலம் ஒரே நாளில் 5 ஆயிரத்து 70 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்து சாதனை படைக்கப்பட்டு உள்ளது.
3. கடந்த 10 ஆண்டுகளில் தமிழகத்தில் கள்ளக்காதலால் நடந்த கொலைகள் 1,311 : ஐகோர்ட்டில், டி.ஜி.பி. அறிக்கை தாக்கல்
தமிழகம் முழுவதும் கடந்த 10 ஆண்டுகளில் கள்ளக்காதலால் 1,311 கொலைகள் நடந்துள்ளன என்று சென்னை ஐகோர்ட்டில் டி.ஜி.பி. அறிக்கை தாக்கல் செய்தார்.
4. தமிழகத்தில் குடிநீர் பிரச்சினையை தீர்க்க மேலும் ரூ.200 கோடி ஒதுக்கீடு எடப்பாடி பழனிசாமி உத்தரவு
தமிழகத்தில் குடிநீர் பிரச்சினையை தீர்க்க மேலும் ரூ.200 கோடி ஒதுக்கீடு செய்து உத்தரவிட்டுள்ள முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, ஜோலார்பேட்டையில் இருந்து சென்னைக்கு ரெயிலில் தண்ணீர் கொண்டு வரவும் நிதி ஒதுக்கி இருக்கிறார்.
5. நீட் தேர்வில் மாற்றுத்திறனாளிகள் பிரிவில் தமிழகத்தில் கரூர் மாணவர் முதலிடம்
நீட் தேர்வில் மாற்றுத்திறனாளிகள் பிரிவில் தமிழகத்தில் முதலிடத்தை கரூர் மாணவர் பெற்றார். மனநல மருத்துவராகி சேவை செய்வதே லட்சியம் என அவர் கூறினார்.