கடைக்குள் புகுந்து கவிழ்ந்த லாரி; சாலையோரம் நின்ற என்ஜினீயர் பலி
திருச்சியில் சாலையோர கடைக்குள் புகுந்து லாரி கவிழ்ந்தது. இதில் நண்பருடன் பேசிக்கொண்டிருந்த என்ஜினீயர் பலியானார்.
திருச்சி,
திருச்சி ரெயில்வே குட்ஷெட்டில் இருந்து நேற்று காலை லாரிகளில் நெல் மூட்டைகள் ஏற்றப்பட்டு திருச்சி கே.கே.நகர் தானிய சேமிப்பு கிடங்கிற்கு கொண்டு செல்லப்பட்டன.
திருச்சி-புதுக்கோட்டை சாலையில் சேதுராமன் பிள்ளை காலனியில் அதிக பாரத்துடன் நெல் மூட்டைகளை ஏற்றிக்கொண்டு லாரி ஒன்று வந்தது. அந்த சாலை ரெயில்வே மேம்பாலத்தில் இருந்து சற்று இறக்கமான பகுதி ஆகும்.
அந்த சாலையோரத்தில் சேதுராமன் பிள்ளை காலனியில் உள்ள நிறுவனம் ஒன்றில் வேலை பார்க்கும் புதுக்கோட்டையை சேர்ந்த முஸ்தபா மகன் அஜீத் ரஹ்மான் (வயது 22), அவரது நண்பர் முகமது ஆசிக் (25) மற்றும் ஒருவர் என 3 பேர் பேசிக்கொண்டு இருந்தனர்.இதில் அஜீத் ரஹ்மான் என்ஜினீயர் ஆவார். மேலும் அவ்வழியாக திருச்சி மாநகர ஆயுதப்படையில் வேலை பார்க்கும் பெண் போலீஸ் (2-ம் நிலை காவலர்) சரண்யா, ஸ்கூட்டரில் சென்று கொண்டிருந்தார்.
அப்போது அதிக வேகத்தில் வந்த நெல் மூட்டைகள் ஏற்றிய லாரி, திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரம் உள்ள விநாயகா ஏஜென்சி என்ற வாகன உதிரிபாகங்கள் கடைக்குள் புகுந்து நடுரோட்டில் நெல் மூட்டைகளுடன் கவிழ்ந்தது. இதில் சாலையோரம் பேசிக்கொண்டிருந்தவர்களில் 2 பேர் மற்றும் பெண் போலீஸ் சரண்யா ஆகியோர் லாரிக்கு அடியில் சிக்கிக்கொண்டனர். ஒருவர் அங்கிருந்து ஓட்டம் பிடித்ததால் தப்பினார்.
இந்த விபத்தில் என்ஜினீயர் அஜீத் ரஹ்மான் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். அவருடைய நண்பர் முகமது ஆசிக் பலத்த காயமடைந்தார். பெண் போலீஸ் சரண்யா தலையில் பலத்த காயத்துடன், இடது கால் நசுங்கிய நிலையில் உயிருக்கு போராடினார். அவருடைய ஸ்கூட்டர் அப்பளம் போல் நொறுங்கி நசுங்கியது.
விபத்திற்கு காரணமான லாரி டிரைவர் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். இந்த விபத்து பற்றி தகவல் அறிந்ததும் தீயணைப்பு படை வீரர்கள் மற்றும் போலீசாரும் விரைந்து வந்தனர். அங்கு 2 கிரேன்கள் வரவழைக்கப்பட்டு சாலையில் கவிழ்ந்து கிடந்த லாரியும், நெல் மூட்டைகளும் அப்புறப்படுத்தப்பட்டன. இடிபாடுகளுக்குள் சிக்கிய பெண் போலீஸ் சரண்யா மற்றும் முகமது ஆசிக் ஆகியோர் ஆம்புலன்ஸ் மூலம் திருச்சி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். அவர்களுக்கு தொடர்ந்து தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதில் பெண் போலீஸ் சரண்யா நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.

Related Tags :
Next Story