மக்கள் ஏற்றுக் கொள்ளாத எந்த திட்டத்தையும் தமிழக அரசு ஏற்றுக் கொள்ளாது - அமைச்சர் ராஜேந்திர பாலாஜி


மக்கள் ஏற்றுக் கொள்ளாத எந்த திட்டத்தையும் தமிழக அரசு ஏற்றுக் கொள்ளாது - அமைச்சர் ராஜேந்திர பாலாஜி
x
தினத்தந்தி 2 Jun 2019 4:20 PM IST (Updated: 2 Jun 2019 4:20 PM IST)
t-max-icont-min-icon

மக்கள் ஏற்றுக் கொள்ளாத எந்த திட்டத்தையும் தமிழக அரசு ஏற்றுக் கொள்ளாது என்று அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தெரிவித்துள்ளார்.

சென்னை,

சாத்தூரில் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி நிருபர்களிடம் கூறியதாவது:-

மத்திய அமைச்சரவையில் இடம்பெறுவது குறித்து அதிமுகவே கவலைப்படாத போது, கமலுக்கு என்ன கவலை. மக்கள் ஏற்றுக் கொள்ளாத எந்த திட்டத்தையும் தமிழக அரசு ஏற்றுக் கொள்ளாது. நேரு கொண்டுவந்த இருமொழிக்கொள்கையில்தான் அதிமுகவுக்கு உடன்பாடு. மும்மொழிக் கொள்கையை கொண்டுவந்தால் அதை தடுக்க தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story