மாவட்ட செயலாளர்களுடன் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அவசர ஆலோசனை
தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அதிமுக நிர்வாகிகளுடன் அவசர ஆலோசனை நடத்தினார்.
சென்னை,
முதல் அமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் வீட்டில் இன்று காலை அதிமுக மாவட்ட செயலாளர்கள், தேர்தல் பொறுப்பாளர்கள் கலந்து கொண்ட ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இந்த ஆலோசனை கூட்டத்தில் துணை முதல் அமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் மற்றும் அமைச்சர்கள், அதிமுக மாநில நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் அடைந்த தோல்வி குறித்தும், வரப்போகும் உள்ளாட்சித் தேர்தலை சந்திப்பது குறித்தும் ஆலோசிக்கப்படுவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதேபோல் சட்டப்பேரவையில் சபாநாயகருக்கு எதிராக எதிர்க்கட்சிகள் நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டு வந்தால் அதை எப்படி எதிர் கொள்வது என்பது தொடர்பாகவும் ஆலோசிக்கப்படுவதாகக் கூறப்படுகிறது.
Related Tags :
Next Story