சாலையின் விளிம்பில் நடந்து சென்ற முதியவர், கார் மோதி தூக்கி வீசப்பட்டு பலி


சாலையின் விளிம்பில் நடந்து சென்ற முதியவர், கார் மோதி தூக்கி வீசப்பட்டு பலி
x
தினத்தந்தி 3 Jun 2019 2:50 PM IST (Updated: 3 Jun 2019 2:50 PM IST)
t-max-icont-min-icon

சாலையின் விளிம்பில் நடந்து சென்ற முதியவர், கார் மோதி தூக்கி வீசப்படும் அதிர்ச்சிகர சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளன.

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம்  தர்மாபுரத்தைச் சேர்ந்த காசிம் என்பவர், காயகுடி ஆற்றுப்பாலம் அருகே உள்ள இரும்புக் கடையில் காவலாளியாக வேலைபார்த்து வந்தார். இவர் நேற்று பிற்பகலில்  டீ குடிப்பதற்காக   சாலையின் வலதுபுறத்தில் விளிம்பில் நடந்து சென்று கொண்டிருந்தார்.

அப்போது சாலையின் இடதுபுறத்தில், காசிமுக்கு எதிர் திசையில் அதிவேகத்தில் வந்த கார் அவர் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட காசிம் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

நிற்காமல் சென்ற கார் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். சாலை ஓரம் செல்லாமல், சாலையின் விளிம்பில் நடந்து சென்றதே விபத்துக்குக் காரணமாகியுள்ளது. விபத்தை ஏற்படுத்திவிட்டு நிற்காமல் சென்ற கார் ஓட்டுனர் குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.

Next Story