7 பேர் விடுதலை தொடர்பாக கவர்னருக்கு அனுப்பப்பட்ட தீர்மானத்தின் தற்போதைய நிலை என்ன? - சென்னை ஐகோர்ட்


7 பேர் விடுதலை தொடர்பாக கவர்னருக்கு  அனுப்பப்பட்ட தீர்மானத்தின் தற்போதைய நிலை என்ன? - சென்னை ஐகோர்ட்
x
தினத்தந்தி 3 Jun 2019 3:00 PM IST (Updated: 3 Jun 2019 3:00 PM IST)
t-max-icont-min-icon

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் ஏழு பேர் விடுதலை தொடர்பாக கவர்னருக்கு அனுப்பப்பட்ட தீர்மானத்தின் தற்போதைய நிலை குறித்து தெரிவிக்க தமிழக அரசு சென்னை ஐகோர்ட்டில் 2 வார அவகாசம் கோரியுள்ளது.

சென்னை,

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் ஏழு பேரை முன்கூட்டியே விடுதலை செய்யக்கோரி 2012-ஆம் ஆண்டு ராபர்ட் பயஸ், ஜெயக்குமார் ஆகியோர் தொடர்ந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது ஏழு பேர் விடுதலை தொடர்பான அமைச்சரவைத் தீர்மானம் கவர்னரிடம்  நிலுவையில் உள்ளதாகவும், தீர்மானத்தின் தற்போதைய நிலை குறித்து தெரிவிக்க 2 வார அவகாசம் தேவை எனவும் தமிழக அரசு தரப்பில் கோரப்பட்டது. அதனை ஏற்று விசாரணையை நீதிபதிகள் 2 வாரங்களுக்கு ஒத்திவைத்தனர்.

இதனிடையே 7 பேர் விடுதலை தொடர்பாக தமிழக உள்துறை செயலாளரிடம் கொடுக்கப்பட்ட மனுவை பரிசீலித்து விரைந்து முடிவெடுக்க உத்தரவிடக்கோரி நளினி தொடர்ந்த வழக்கில் பதில் மனு தாக்கல் செய்ய தமிழக அரசு தரப்பில் அவகாசம் கோரப்பட்டது. அதனையடுத்து விசாரணையை நீதிபதிகள் 4 வாரங்களுக்கு ஒத்திவைத்தனர். 

Next Story