பொறியியல் படிப்பிற்கான ரேண்டம் எண்களை உயர்கல்வித்துறை அமைச்சர் அன்பழகன் வெளியிட்டார்
பொறியியல் படிப்பிற்கான ரேண்டம் எண்களை உயர்கல்வித்துறை அமைச்சர் அன்பழகன் இன்று வெளியிட்டார்.
சென்னை,
பொறியியல் படிப்பிற்கான ரேண்டம் எண்களை உயர்கல்வித்துறை அமைச்சர் அன்பழகன் வெளியிட்டார். பின்னர் அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது;-
பொறியியல் படிப்பில் சேர 1,33,116 பேர் விண்ணப்பித்துள்ளனர். அண்ணா பல்கலை. துணை வேந்தர் சூரப்பா, சர்வாதிகாரி போல் செயல்பட முடியாது. அவர் தவறு செய்தால் அரசு நடவடிக்கை எடுக்கும்.
மாணவர்கள் மனநிலையை பொறுத்துதான் படிப்பை தேர்வு செய்கிறார்கள், கல்வியை திணிக்க முடியாது; பாலிடெக்னிக் படிப்புகள் மீதான ஆர்வம் இந்தாண்டு குறைந்துள்ளது. பல்கலைக்கழக பேராசிரியர்கள் மீது தவறுகள் அல்லது முறைகேடு கண்டறியப்பட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என கூறினார்.
eaonline.in என்ற இணையதளத்தில் ரேண்டம் எண்ணை மாணவர்கள் அறிந்து கொள்ளலாம்.
Related Tags :
Next Story