இருமொழி கொள்கை தான் தமிழக அரசின் நிலைப்பாடு - அமைச்சர் ஜெயக்குமார்
இருமொழி கொள்கை தான் தமிழக அரசின் நிலைப்பாடு என்று அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார்.
சென்னை,
அமைச்சர் ஜெயக்குமார் நிருபர்களிடம் கூறியதாவது:-
அதிமுக எம்.எல்.ஏக்களில் ஒருவரையும் ஸ்டாலினால் விலைக்கு வாங்க முடியாது. 2021-ல் தான் சட்டசபை தேர்தல் வரும் அதில் எந்த மாற்றமும் இல்லை. என்றுமே மாற்றம் இல்லை.
மக்கள் அதிமுகவின் பக்கம் இருக்கிறார்கள் என்பதை இடைத்தேர்தல் முடிவுகள் காட்டியுள்ளன. மும்மொழி திட்டம் என்பது நெருப்பில் கை வைப்பது போல, அதை ஏற்க முடியாது. மும்மொழி கொள்கை என்பதை ஏற்க முடியாது, இருமொழி கொள்கை தான் தமிழக அரசின் நிலைப்பாடு.
இவ்வாறு அவர் கூறினார்.
Related Tags :
Next Story