சிலை கடத்தல் தடுப்பு வழக்குகளை விசாரித்து வந்த உயர்நீதிமன்ற சிறப்பு அமர்வு கலைப்பு
சிலை கடத்தல் தடுப்பு வழக்குகளை விசாரித்து வந்த உயர்நீதிமன்ற சிறப்பு அமர்வு கலைக்கப்பட்டது.
சென்னை
தமிழக கோவில் சிலைகள் திருட்டு தொடர்பான வழக்குகளை விசாரிக்கும், நீதிபதி மகாதேவன், ஆதிகேசவலு அடங்கிய சிறப்பு அமர்வை கலைத்து சென்னை உயர்நீதிமன்ற பதிவுத்துறை அறிவிப்பு வெளியிட்டு உள்ளது. சிலை கடத்தல் தடுப்பு வழக்குகளை இனி நீதிபதிகள் மகாதேவன், ஆதிகேசவலு அடங்கிய சிறப்பு அமர்வு விசாரிக்காது.
இனி சிலை கடத்தல் தடுப்பு வழக்குகளை பொது நல மனுக்களை விசாரிக்கும் உயர்நீதிமன்ற அமர்வு விசாரிக்கும் என பதிவுத்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. தற்போது வழக்குகள் எண்ணிக்கை குறைந்து வருவதால், சம்பந்தப்பட்ட நீதிபதிகளே இது தொடர்பான வழக்குகளை விசாரிப்பார்கள் என கூறப்பட்டு உள்ளது.
Related Tags :
Next Story