ஜெயலலிதா நினைவிடத்தில் ஓ.பி.எஸ். மற்றும் மகன் மரியாதை


ஜெயலலிதா நினைவிடத்தில் ஓ.பி.எஸ். மற்றும் மகன் மரியாதை
x
தினத்தந்தி 5 Jun 2019 10:08 AM IST (Updated: 5 Jun 2019 10:08 AM IST)
t-max-icont-min-icon

சென்னையில் உள்ள ஜெயலலிதா நினைவிடத்தில் துணை முதல் அமைச்சர் ஓ.பி.எஸ். மற்றும் அவரது மகன் மலர்தூவி மரியாதை செலுத்தினர்.

சென்னை,

நாடாளுமன்ற மக்களவை தேர்தல் மற்றும் தமிழக சட்டசபைக்கான இடைத்தேர்தல் கடந்த ஏப்ரல் 18ந்தேதி நடந்தது.  இதற்கான வாக்கு எண்ணிக்கை கடந்த மே 23ந்தேதி நடந்தது.

இதில் தேனி நாடாளுமன்ற தொகுதியில் அ.தி.மு.க. சார்பில் போட்டியிட்டு ரவீந்திரநாத் வெற்றி பெற்றார்.  

இதனை அடுத்து சென்னை மெரினாவில் உள்ள மறைந்த முன்னாள் முதல் அமைச்சர் ஜெயலலிதா நினைவிடத்திற்கு சென்று தமிழக துணை முதல் அமைச்சர் ஓ. பன்னீர் செல்வம் மற்றும் அவரது மகன் ரவீந்திரநாத் எம்.பி. இன்று மரியாதை செலுத்தினர்.

அவர்கள் உடன் அமைச்சர் உதயகுமார் மற்றும் அ.தி.மு.க. நிர்வாகிகளும் மலர்தூவி மரியாதை செலுத்தினர்.

Next Story