கேரளாவில் மீண்டும் ‘நிபா’ வைரஸ் காய்ச்சல் பாதிப்பு, எல்லையில் மருத்துவமனைகளில் கண்காணிக்க தமிழக அரசு உத்தரவு
கேரளாவில் மீண்டும் ‘நிபா’ வைரஸ் காய்ச்சல் பாதிப்பை அடுத்து தமிழக எல்லை பகுதிகள், அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் கண்காணிக்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
கடந்த ஆண்டு 17 பேரை பலி வாங்கிய ‘நிபா’ வைரஸ் காய்ச்சல், கேரளாவில் மீண்டும் தாக்கி உள்ளது. கல்லூரி மாணவருக்கு நோய் பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. நோயை கட்டுப்படுத்த மத்திய குழு விரைந்தது. மாணவருடன் நெருக்கமாக பழகிய பிற மாணவர்கள், உறவினர்கள் என 300 பேரை தீவிர கண்காணிப்பின் கீழ் மருத்துவ குழு வைத்துள்ளது. மாநிலம் முழுவதும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தமிழக அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கையை தொடங்கியுள்ளது.
தமிழக எல்லை பகுதிகள், அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் கண்காணிக்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
நிபா வைரஸ் அறிகுறிகள் தென்பட்டால் 044-24350496, 044-24334811, 9444340496, 8754448477 என்ற எண்களில் தொடர்பு கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Related Tags :
Next Story