கடந்த ஆண்டை விட நீட் தேர்வு தேர்ச்சி சதவீதத்தில் தமிழகம் முன்னேற்றம்


கடந்த ஆண்டை விட நீட் தேர்வு தேர்ச்சி சதவீதத்தில் தமிழகம் முன்னேற்றம்
x
தினத்தந்தி 6 Jun 2019 2:15 AM IST (Updated: 6 Jun 2019 2:00 AM IST)
t-max-icont-min-icon

தேசிய தேர்வு முகமை நடத்திய நீட் தேர்வு முடிவு நேற்று வெளியிடப்பட்டது.

தேசிய தேர்வு முகமை நடத்திய நீட் தேர்வு முடிவு நேற்று வெளியிடப்பட்டது. இதில் நாடு முழுவதும் 56.50 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்று இருக்கின்றனர். அதில் ஒவ்வொரு மாநிலம் வாரியாக தேர்வு எழுத விண்ணப்பித்தவர்கள் எவ்வளவு பேர்? தேர்வு எழுதியவர்கள் எவ்வளவு பேர்? தேர்ச்சி அடைந்தவர்கள் எத்தனை பேர்? தேர்ச்சி சதவீதம் போன்ற தகவல்கள் அடங்கிய பட்டியலை தேசிய தேர்வு முகமை வெளியிட்டது.

அதில் தமிழ்நாட்டில் இருந்து ஒரு லட்சத்து 38 ஆயிரத்து 997 பேர் தேர்வு எழுத விண்ணப்பித்து இருந்ததில், 1 லட்சத்து 23 ஆயிரத்து 78 பேர் தேர்வு எழுதி இருந்தனர். அவர்களில் 59 ஆயிரத்து 785 பேர் தேர்ச்சி பெற்று இருக்கின்றனர். தேர்ச்சி சதவீதம் 48.57 ஆகும். கடந்த ஆண்டில் தேர்ச்சி சதவீதம் 39.56 ஆகும். இதனோடு ஒப்பிட்டு பார்க்கும்போது, கடந்த ஆண்டை விட 9.01 சதவீதம் அதிகமானோர் தேர்ச்சி பெற்று இருக்கின்றனர்.

தேர்ச்சி சதவீத பட்டியலில் தமிழ்நாடும், புதுச்சேரியும் கடந்த ஆண்டை விட அதிகம் பேர் தேர்ச்சி அடைந்து இருப்பதாக சுட்டிக்காட்டப்பட்டு இருக்கிறது. அதிகபட்சமாக புதுச்சேரி கடந்த ஆண்டை விட 9.08 சதவீதமும், அதற்கு அடுத்தபடியாக தமிழ்நாடு 9.01 சதவீதம் பேரும் அதிகமாக தேர்ச்சி பெற்றுள்ளனர். மற்ற மாநிலங்களில் வித்தியாசம் ஓரளவு தான் இருக்கிறது.

Next Story