கொடைக்கானலில் 2 மணி நேரம் பலத்த மழை நீர்வீழ்ச்சிகளில் வெள்ளம் ஆர்ப்பரித்து கொட்டியது
திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் பகுதியில் வழக்கமாக ஜூன் 1-ந்தேதி தென்மேற்கு பருவமழை தொடங்கி ஆகஸ்ட் மாதம் இறுதிவரை நீடிக்கும்.
கொடைக்கானல்,
திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் பகுதியில் வழக்கமாக ஜூன் 1-ந்தேதி தென்மேற்கு பருவமழை தொடங்கி ஆகஸ்ட் மாதம் இறுதிவரை நீடிக்கும். இதற்கிடைய இந்த ஆண்டு தென்மேற்கு பருவமழை தொடங்கும் அறிகுறியாக நேற்று முன்தினம் இரவு 10 மணி முதல் 12 மணி வரை சாரல் மழை பெய்தது.
அதனைத்தொடர்ந்து நேற்று காலை முதலே வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. பின்னர் பிற்பகல் முதல் லேசான சாரல் மழை பெய்தது. இதையடுத்து மாலை 4 மணி முதல் 2 மணி நேரம் நகர் மற்றும் பல்வேறு பகுதிகளில் பலத்த மழை கொட்டி தீர்த்தது. இந்த மழை காரணமாக நட்சத்திர ஏரியின் நீர்மட்டம் சுமார் 1 அடிக்கு மேல் அதிகரித்தது. மேலும் நகருக்கு குடிநீர் வழங்கும் அணைகளின் நீர்மட்டமும் அதிகரித்து வருகிறது.
இதனிடையே பலத்த மழை காரணமாக வெள்ளி நீர்வீழ்ச்சி, பாம்பார் நீர்வீழ்ச்சி, பியர்சோழா நீர்வீழ்ச்சிகளில் வெள்ளம் ஆர்ப்பரித்து கொட்டியது. அத்துடன் கொடைக்கானலில் இருந்து வத்தலக்குண்டு செல்லும் மலைப்பாதையில் செண்பகனூர் அருகே மரம் ஒன்று முறிந்து விழுந்தது. இதனால் அப்பகுதியில் அரை மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
Related Tags :
Next Story