இந்தியாவே திரும்பி பார்க்கும் வகையில் புதிய அறிவிப்புகள் வர உள்ளன; அமைச்சர் செங்கோட்டையன்
இந்தியாவே திரும்பி பார்க்கும் வகையில் புதிய அறிவிப்புகள் வர உள்ளன என அமைச்சர் செங்கோட்டையன் கூறியுள்ளார்.
ஈரோடு,
தமிழக பள்ளி கல்வி துறை அமைச்சர் செங்கோட்டையன் ஈரோட்டின் கெட்டிசெவியூர் பகுதியில் செய்தியாளர்களிடம் கூறும்பொழுது, இந்த மாத இறுதிக்குள் அனைத்து மாணவ மாணவியர்களுக்கும் சீருடைகள் மற்றும் புத்தகங்கள் வழங்கப்படும். மாணவ மாணவியர்களுக்கு விரைவில் மடிக்கணினி மற்றும் ஸ்மார்ட் கார்டுகள் ஆகியவையும் வழங்கப்படும் என்று கூறினார்.
இதுவரை 7 லட்சத்து 40 ஆயிரம் பாடப்புத்தகங்கள் வழங்கப்பட்டு உள்ளன. 8 வகுப்புகளுக்கு பாடத்திட்டங்கள் மாற்றியமைக்கப்பட்டு உள்ளன. இதேபோன்று இந்தியாவே திரும்பி பார்க்கும் வகையில் புதிய அறிவிப்புகள் வர உள்ளன என்றும் அவர் கூறியுள்ளார்.
Related Tags :
Next Story