தங்கும் விடுதியில் பெண்ணுடன் இருந்த போலீஸ்காரர் சிக்கினார்
சேலம் கொண்டலாம்பட்டி பகுதியில் உள்ள ஒரு தங்கும் விடுதிக்கு போலீஸ்காரர் ஒருவர் இளம்பெண்களை அழைத்து சென்று உல்லாசமாக இருந்து வந்ததாக கூறப்படுகிறது.
சேலம்,
சேலம் கொண்டலாம்பட்டி பகுதியில் உள்ள ஒரு தங்கும் விடுதிக்கு போலீஸ்காரர் ஒருவர் இளம்பெண்களை அழைத்து சென்று உல்லாசமாக இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து அந்த விடுதியில் வேலை பார்த்த சில ஊழியர்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். இதுபற்றி தெரியவந்ததும் அந்த ஊழியர்களை போலீஸ்காரர் மிரட்டி உள்ளார். இதுகுறித்து நுண்ணறிவு போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து உயர் அதிகாரிகள் உத்தரவின் பேரில் போலீசார் அவரை கண்காணித்து வந்தனர். இந்தநிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு அந்த தங்கும் விடுதிக்கு போலீஸ்காரர் பெண் ஒருவரை அழைத்து சென்றதாக கூறப்படுகிறது. இதுபற்றி தகவல் அறிந்ததும் அவரை பிடிப்பதற்காக போலீசார் அந்த தங்கும் விடுதிக்கு விரைந்து சென்றனர். பின்னர் தங்கும் விடுதியில் இருந்த ஒரு அறைக்குள் அரைகுறை ஆடையுடன் இருந்த அந்த போலீஸ்காரரை போலீசார் பிடித்தனர். இதையடுத்து அவரை போலீஸ் நிலையத்துக்கு அழைத்து சென்று விசாரணை நடத்தினர். அவருடன் இருந்த பெண்ணை போலீசார் எச்சரித்து அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் சேலத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இதற்கிடையில், இதுகுறித்து உயர் போலீஸ் அதிகாரிகள் விசாரணை நடத்தி, அந்த போலீஸ்காரரை இடமாற்றம் செய்து உத்தரவிட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Related Tags :
Next Story