மதுரை தோப்பூரில் எய்ம்ஸ் மருத்துவமனை பணியில் எந்தத் தொய்வும் இல்லை- அமைச்சர் விஜயபாஸ்கர்
மதுரை தோப்பூரில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்கும் பணியில் எந்தத் தொய்வும் இல்லை என அமைச்சர் விஜயபாஸ்கர் கூறினார்.
புதுக்கோட்டை,
மதுரை தோப்பூரில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க மாநில அரசு இதுவரை நிலம் ஒப்படைக்கவில்லை என ஆர்டிஐயில் தகவல் வெளியானதாக கூறப்பட்டது.
இதுகுறித்து சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் கூறியதாவது:-
மதுரை தோப்பூரில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்கும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க ரூ.1,264 கோடி வழங்க ஒப்புதலாகி உள்ளது. பணியில் எந்தத் தொய்வும் இல்லை. மதுரை தோப்பூரில் எய்ம்ஸ் மருத்துவமனை அமையவுள்ள இடத்தை ஆய்வு செய்ய டெல்லி மற்றும் ஜப்பானில் இருந்து 8 பேர் கொண்ட தொழில்நுட்ப குழுவினர் வர உள்ளனர். தொழில்நுட்ப குழுவினர் 10-ம் தேதி முதல் 15-ம் தேதி வரை ஆய்வு செய்கின்றனர்.
தமிழகத்தில் நிபா வைரஸ் பாதிப்பு இல்லை, இதே நிலை தொடர நடவடிக்கை எடுக்கப்படும் என கூறினார்.
Related Tags :
Next Story