தென்மேற்கு பருவமழை தொடங்கியது தமிழகத்தின் ஓரிரு இடங்களில் கனமழைக்கு வாய்ப்பு
தென்மேற்கு பருவமழை தொடங்கியது தமிழகத்தின் ஓரிரு இடங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது என சென்னை வானிலை மையம் கூறி உள்ளது.
சென்னை
சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் புவியரசன் கூறியதாவது:-
அரபிக்கடல் பகுதியில், மாலத்தீவு, லட்சத்தீவுகளில் மேகங்கள் அதிகரித்துள்ளன. கேரளாவில் பருவமழை தொடங்கிவிட்டது. மேற்கு மலைத்தொடர்ச்சியை ஒட்டியுள்ள தமிழக மாவட்டங்களிலும் பருவமழை தொடங்கி விட்டது. கன மழைக்கு வாய்ப்புள்ளது.
தமிழகத்தின் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யக்கூடும். உள் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும்,''
சென்னையில் வெயிலின் தாக்கம் குறைய ஒருவாரம் ஆகும். கேரளாவில் தற்போது மழையின் அளவு குறைவாகவே உள்ளது என கூறினார்.
கேரளாவில் தென்மேற்கு பருவமழை இன்று தொடங்குமென இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்து உள்ளது. திருச்சூர், எர்ணாகுளம், மலப்புரம், கோழிக்கோடு ஆகிய மாவட்டங்களில் அடுத்த 2 நாட்களுக்கு தீவிர கனமழையைக் குறிக்கும் ரெட் அலர்ட் விடுக்கப்பட்டு உள்ளது.
கொல்லம், ஆலப்புழா மாவட்டங்களில் நாளையும் திருவனந்தபுரம், கொல்லம், ஆலப்புழா, எர்ணாகுளம் உள்ளிட்ட 5 மாவட்டங்களில் நாளை மறுநாளும் கன முதல் மிக கனமழை பெய்யுமென எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
Related Tags :
Next Story