விவசாயிகளுக்கு ஆண்டுக்கு ரூ.6 ஆயிரம் நிதியுதவி: மத்திய அரசின் நிதியை பெற சிக்கல்களை நீக்க வேண்டும் டாக்டர் ராமதாஸ் வலியுறுத்தல்


விவசாயிகளுக்கு ஆண்டுக்கு ரூ.6 ஆயிரம் நிதியுதவி: மத்திய அரசின் நிதியை பெற சிக்கல்களை நீக்க வேண்டும் டாக்டர் ராமதாஸ் வலியுறுத்தல்
x
தினத்தந்தி 9 Jun 2019 12:19 AM IST (Updated: 9 Jun 2019 12:19 AM IST)
t-max-icont-min-icon

மத்திய அரசு செயல்படுத்தி வரும் பிரதமரின் விவசாயிகள் நிதி உதவித்திட்டத்தின் கீழ் வழங்கப்படும் ரூ.6 ஆயிரத்தை தமிழகத்தில் உள்ள பெரும்பான்மையான விவசாயிகளால் பெற முடியாத நிலை ஏற்பட்டு இருக்கிறது.

சென்னை, 

பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:–

மத்திய அரசு செயல்படுத்தி வரும் பிரதமரின் விவசாயிகள் நிதி உதவித்திட்டத்தின் கீழ் வழங்கப்படும் ரூ.6 ஆயிரத்தை தமிழகத்தில் உள்ள பெரும்பான்மையான விவசாயிகளால் பெற முடியாத நிலை ஏற்பட்டு இருக்கிறது. இத்திட்டத்தை செயல்படுத்துவதில் உள்ள நடைமுறை சிக்கல்கள், அடிப்படை தகுதிகளை நிறைவேற்றுவதில் உள்ள சிக்கல்களே இதற்கு காரணம் என்று தெரியவந்துள்ளது.

மத்தியில் நரேந்திரமோடி தலைமையிலான அரசு மீண்டும் பதவியேற்ற பின்னர், சிறு, குறு விவசாயிகளுக்கு மட்டும் செயல்படுத்தப்பட்டு வந்த இந்த திட்டம் அனைத்து விவசாயிகளுக்கும் நீட்டிக்கப்பட்டு இருக்கிறது. அதன்படி தமிழகத்தில் பயனாளிகளின் எண்ணிக்கை 81.18 லட்சமாக உயரும். இவர்களில் 25 சதவீதத்திற்கும் குறைவானவர்களுக்கு மட்டும் நிதி உதவி வழங்கப்பட்டால், அத்திட்டம் செயல்படுத்தப்படுவதற்கே அர்த்தமில்லாமல் போய்விடும்.

விவசாயிகளுக்கு பட்டா மாறுதல் செய்ய சிறப்பு இயக்கத்தை அரசு நடத்த வேண்டும். இதற்காக கிராம அளவில் சிறப்பு முகாம்களுக்கு ஏற்பாடு செய்து, அதில் உரிய ஆவணங்கள் அளிக்கும் விவசாயிகளுக்கு பட்டா மாறுதல் செய்து, பிரதமரின் நிதி உதவித்திட்ட பயனாளிகள் பட்டியலில் அவர்களது பெயரை சேர்க்க வேண்டும். தகுதியுடைய சிறு,குறு விவசாயிகளுக்கு டிசம்பர்–மார்ச் காலத்திற்கான ரூ.2 ஆயிரம் நிதியை நிலுவைத்தொகையாக கணக்கிட்டு வழங்கவும் மத்திய, மாநில அரசுகள் முன்வர வேண்டும்.

இவ்வாறு அறிக்கையில் அவர் கூறியுள்ளார்.

Next Story