ராமேசுவரத்தில் கடல் உள்வாங்கியது


ராமேசுவரத்தில் கடல் உள்வாங்கியது
x
தினத்தந்தி 9 Jun 2019 1:15 AM IST (Updated: 9 Jun 2019 1:03 AM IST)
t-max-icont-min-icon

ராமேசுவரம் பகுதியில் வழக்கத்திற்கு மாறாக கடந்த சில நாட்களாக பலத்த காற்று வீசி வருகிறது.

ராமேசுவரம், 

ராமேசுவரம் பகுதியில் வழக்கத்திற்கு மாறாக கடந்த சில நாட்களாக பலத்த காற்று வீசி வருகிறது. இந்தநிலையில் ராமேசுவரம் துறைமுக கடல் பகுதியில் நேற்று காலை முதலே பல அடி தூரம் கடல் உள்வாங்கி காணப்பட்டது. பகல் 3 மணிக்கு மேல் மீண்டும் கடல் நீர் சகஜ நிலைக்கு திரும்பியது.

பாம்பன் பகுதியில் பலத்த சூறாவளி காற்று வீசியதால் காற்றின் வேகத்துக்கு ஏற்ப செயல்படும் தானியங்கி சிக்னலில் சிக்னல் கிடைக்கவில்லை. இதனால் ராமேசுவரத்தில் இருந்து நேற்று மாலை 5 மணிக்கு புறப்பட்ட எக்ஸ்பிரஸ் ரெயில் அக்காள்மடத்தில் இரவு 7 மணி வரை நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது.

மாலை 6 மணிக்கு மதுரைக்கு புறப்பட வேண்டிய பயணிகள் ரெயிலும் 7 மணி வரை ராமேசுவரம் ரெயில் நிலையத்திலேயே நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. ஆனால் காற்றின் வேகம் குறையாத காரணத்தினால் இரவு 9 மணிக்கு பின்னரும் ரெயில்கள் புறப்பட்டு செல்லவில்லை.

Next Story