குடிநீர் பிரச்சினை: சட்டப்பேரவையில் ஸ்டாலின் சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானம்


குடிநீர் பிரச்சினை: சட்டப்பேரவையில் ஸ்டாலின் சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானம்
x
தினத்தந்தி 1 July 2019 11:55 AM IST (Updated: 1 July 2019 11:55 AM IST)
t-max-icont-min-icon

குடிநீர் பிரச்சினை குறித்து சட்டப்பேரவையில் மு.க.ஸ்டாலின் சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்தார்.

சென்னை, 

தமிழகத்தில் நிலவும் குடிநீர் பிரச்சினை குறித்து சட்டப்பேரவையில் சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானத்தை எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் கொண்டு வந்தார். சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானம் மீது பேசிய ஸ்டாலின் கூறியதாவது:- “குடிநீர் பிரச்சினையை தீர்க்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். சென்னைக்கு நீர் ஆதாரமான 4 ஏரிகளும் வறண்டு விட்டன.

2020-ல் சென்னையில் குடிநீர் பிரச்சினை ஏற்படும் என்று நிதி ஆயோக்  கூறியிருந்தது. ஆனால், 2019- ஆம் ஆண்டிலேயே குடிநீர் பஞ்சம் வந்துவிட்டது. நிதி ஆயோக் அறிக்கையை தமிழக அரசு பொருட்படுத்தவில்லை. குடிமராமத்து பணிகள் தோல்வி அடைந்து விட்டது. ஜோலார்பேட்டையில் இருந்து சென்னைக்கு குடிநீர் கொண்டு வருவது வரவேற்கத்தக்கது” இவ்வாறு அவர் பேசி வருகிறார்.

Next Story