நிர்வாகிகள் விலகி செல்லச்செல்ல கட்சி பலப்படும் -டிடிவி தினகரன்


நிர்வாகிகள் விலகி செல்லச்செல்ல கட்சி பலப்படும் -டிடிவி தினகரன்
x
தினத்தந்தி 2 July 2019 12:58 PM IST (Updated: 2 July 2019 12:58 PM IST)
t-max-icont-min-icon

நிர்வாகிகள் விலகி செல்லச்செல்ல கட்சி பலப்படும் என டிடிவி.தினகரன் கூறினார்.

சென்னை

அம்மா மக்கள் முன்னேற்ற கழக பொதுச்செயலாளர்  டிடிவி தினகரன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார் அப்போது அவர் கூறியதாவது;-

``ஏற்கெனவே நான் சொன்னதுதான். நிர்வாகிகள் தங்கள் சொந்தக் காரணங்களுக்காக, சுயநலத்துக்காக வெளியே போகிறார்கள் என்றால் அவர்களை தடுத்துநிறுத்தி என்ன ஆகப்போகிறது. கட்சி என்பது விருப்பப்பட்டு இருப்பதுதான்.

இது தொண்டர்களால் உருவாக்கப்பட்ட இயக்கம்.  தினகரன் கட்சி சரிவு என்று வேண்டுமென்றால் ஊடகங்கள் போடுங்கள்.  யார் சென்றாலும் எங்களுக்கு பாதிப்பில்லை, நிர்வாகிகள் விலகி செல்லச்செல்ல கட்சி பலப்படும் என கூறினார்.

Next Story