ஜாக்டோ-ஜியோ 7-ந் தேதி போராட்டம் : சென்னையில் நடக்கிறது


ஜாக்டோ-ஜியோ 7-ந் தேதி போராட்டம் : சென்னையில் நடக்கிறது
x
தினத்தந்தி 3 July 2019 4:25 AM IST (Updated: 3 July 2019 4:25 AM IST)
t-max-icont-min-icon

பழைய ஓய்வூதிய திட்டத்தை நிறைவேற்ற வேண்டும் என்பது உள்பட 9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஏற்கனவே ஜாக்டோ-ஜியோ சார்பில் போராட்டம் நடந்தது.

சென்னை, 

முதல்-அமைச்சரின் வேண்டுகோளை ஏற்று, தற்காலிகமாக வாபஸ் பெற்றனர். இந்த நிலையில் ஜாக்டோ-ஜியோவின் 9 அம்ச கோரிக்கைகள் நேற்று நடந்த பள்ளிக்கல்வி துறை மானியக்கோரிக்கையில் இடம்பெறுமா என்று அதன் நிர்வாகிகள் எதிர்பார்த்து இருந்தனர். 

ஆனால் அவர்கள் எதிர்பார்த்த அறிவிப்பு எதுவும் வராததால், ஜாக்டோ-ஜியோ மாநில ஒருங்கிணைப்பாளர்கள் கூட்டம் ஒருங்கிணைப்பாளர்கள் அன்பரசு, தியாகராஜன் தலைமையில் சென்னையில் நேற்று நடந்தது. கூட்டத்தின் முடிவில் சில முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டன. அதன் தொடர்ச்சியாக ஜாக்டோ-ஜியோ சார்பில் வெளியிடப்பட்ட அறிக்கையில் கூறப்பட்டு இருப்பதாவது:-

9 அம்ச கோரிக்கைகள் தொடர்பாக ஜாக்டோ-ஜியோ நிர்வாகிகளை, முதல்-அமைச்சர் அழைத்து பேசி நிறைவேற்ற வேண்டும். வேலைநிறுத்த போராட்டத்தின் போது ஆசிரியர்கள், ஊழியர்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கையை ரத்து செய்ய வேண்டும். 

மாநில ஒருங்கிணைப்பாளர் மு.சுப்பிரமணியனை பணி ஓய்வுபெறும் நாளில் தற்காலிக பணிநீக்கம் செய்ததை ரத்து செய்ய வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வருகிற 7-ந் தேதி(ஞாயிற்றுக் கிழமை) சென்னை சேப்பாக்கம் எழிலக வளாகத்தில் போராட்டம் நடத்தப்படும்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Next Story