தமிழகத்தில் எந்த ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கும் அனுமதி இல்லை -பேரவையில் அமைச்சர் சி.வி.சண்முகம் விளக்கம்


தமிழகத்தில் எந்த ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கும் அனுமதி இல்லை -பேரவையில் அமைச்சர் சி.வி.சண்முகம்  விளக்கம்
x
தினத்தந்தி 3 July 2019 7:03 AM GMT (Updated: 3 July 2019 8:42 AM GMT)

தமிழகத்தில் எந்த ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கும் அனுமதி இல்லை என்று அமைச்சர் சி.வி.சண்முகம் தெரிவித்துள்ளார்.

சென்னை,

ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு அனுமதி அளித்தது தொடர்பாக பேரவையில் திமுக-அதிமுக இடையே காரசார விவாதம் நடைபெற்றது. அப்போது  ஹைட்ரோ கார்பன்- சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானத்திற்கு பதில் அளித்து  பேரவையில்  சட்ட அமைச்சர்  சி.வி.சண்முகம் பேசியதாவது:-

ஹைட்ரோ கார்பன் எடுக்க திமுக ஆட்சியில் தந்த அனுமதியை ரத்து செய்தது அதிமுக அரசு தான். ஹைட்ரோ கார்பன் விவகாரத்தில் மக்களை தூண்டி விட்டு போராட்டம் நடத்துகின்றனர்.

ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு இதுவரை தமிழக அரசு அனுமதி வழங்க  வில்லை, இனிமேலும் வழங்க மாட்டோம். தமிழகத்தில் எந்த ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கும் அனுமதி இல்லை. எந்த நிறுவனத்திற்கும் தமிழகத்தில் அனுமதி வழங்கப்படவில்லை. ஓ.என்.ஜி.சி அனுமதி கோரியும் தமிழக அரசு ஒப்புதல் தரவில்லை.

இவ்வாறு அவர் பேசினார்.

Next Story