காஞ்சீபுரத்தில் அத்திவரதர் வைபவம் நடைபெறும் இடம் அருகே ஆட்டோ ஓட்டுநர் தீக்குளித்து தற்கொலை


காஞ்சீபுரத்தில் அத்திவரதர் வைபவம் நடைபெறும் இடம் அருகே ஆட்டோ ஓட்டுநர் தீக்குளித்து தற்கொலை
x
தினத்தந்தி 3 July 2019 5:04 PM IST (Updated: 3 July 2019 5:04 PM IST)
t-max-icont-min-icon

காஞ்சீபுரத்தில் அத்திவரதர் வைபவம் நடைபெறும் இடம் அருகே ஆட்டோ ஓட்டுநர் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

சென்னை,

108 திவ்ய தேசங்களில் ஒன்று காஞ்சீபுரம் வரதராஜ பெருமாள் கோவில். இந்த கோவில் குளத்தில் உள்ள மண்டபத்தில் வைக்கப்பட்டிருக்கும் அத்திவரதர் 40 ஆண்டுகளுக்கு ஒரு முறை பக்தர்களுக்கு தரிசனம் தருவார். இந்த நிலையில் அத்திவரதர் 40 ஆண்டுகளுக்கு பிறகு நேற்று முன்தினம் அதிகாலை கோவில் வசந்த மண்டபத்தில் பக்தர்களுக்கு தரிசனம் தந்தார்.

இதையடுத்து கடந்த ஜூலை மாதம் 1-ஆம் தேதி முதல் பக்தர்களுக்கு அனந்தசயன கோலத்தில் காட்சி அளித்து வருகிறார். அத்திவரதரை தரிசிக்க பல்வேறு இடங்களில் இருந்து வந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.

அத்திவரதர் வைபவத்துக்காக 3 இடங்களில் தற்காலிக பஸ் நிலையங்களை மாவட்ட நிர்வாகம் ஏற்படுத்தியது. இதற்காக போக்குவரத்தும்  மாற்றப்பட்டுள்ளது. இந்த நிலையில் அத்திவரதர் வைபவம் நடைபெறும் இடம் அருகே ஷேர் ஆட்டோ ஓட்டுநர் குமாரை போலீசார் அனுமதிக்கவில்லை.

அவரிடம் அனுமதி சீட்டு இருந்தும் அவரை போலீசார் அனுமதிக்காததை கண்டித்து அத்திவரதர் வைபவம் நடைபெறும் இடம் அருகே பெட்ரோல் ஊற்றி தீ வைத்துக் கொண்டார். இதையடுத்து தீக்காயமடைந்த ஆட்டோ ஓட்டுநரை மீட்ட போலீசார் செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். எனினும் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

போலீஸாருடன் வாக்குவாதம் ஏற்பட்ட நிலையில் ஆட்டோ ஓட்டுநரின் இந்த  விபரீத முடிவு பக்தர்கள் இடையே சோகத்தை ஏற்படுத்தியது. இந்த சம்பவம் குறித்து உயர் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story