காஞ்சீபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில் போலீசார் தாக்கியதில் ஆந்திர இளைஞர் உயிரிழப்பு
காஞ்சீபுரம் அத்திவரதர் வைபவத்தின் போது போலீசார் தாக்கியதில் ஆந்திராவை சேர்ந்த இளைஞர் உயிரிழந்தார்.
காஞ்சீபுரம்,
காஞ்சீபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில் அத்திவரதர் வைபவம் நடைபெற்று வருகிறது. இவ்விழாவில் அத்தி வரதரைத் தரிசனம் செய்ய நாடு முழுவதிலும் இருந்து திரளான பக்தர்கள் காஞ்சீபுரத்திற்கு வருகை தந்தவாறு உள்ளனர். முதல் இரண்டு நாட்களிலும் லட்சத்திற்கும் மேலான பக்தர்கள் தரிசனம் செய்துள்ளனர்.
இந்நிலையில், அத்திவரதர் தரிசனத்திற்கு வந்திருந்த ஆந்திர இளைஞர் ஒருவர் போலீஸ் தாக்குதலில் பலியானதாகப் புகார் எழுந்துள்ளது.
ஆந்திராவைச் சேர்ந்த சக்தி ஆகாஷ் என்ற இளைஞர் தனது தாயாருடன் கடந்த திங்கட்கிழமை காஞ்சீபுரத்திற்கு வந்துள்ளார். தரிசனத்திற்காக அவர் அங்கு தங்கியிருந்தார்.
புதனன்று கோவிலுக்குச் சென்ற அவர் காஞ்சீபுரம் வரதராஜப் பெருமாள் கோயிலில் இருந்த தங்கப்பல்லியை புகைப்படம் எடுக்க முயன்றதாக கூறப்படுகிறது.
இதனால் கோவில் ஊழியர்கள் கண்டித்ததன் பேரில், பாதுகாப்பிற்கு இருந்த போலீசார் அவரை தாக்கியதாகக் கூறப்படுகிறது. இதனால் மயக்கமடைந்த அவர் உயிரிழந்தாக கூறப்படுகிறது. இதுகுறித்து சக்தி ஆகாஷின் தாயாரும் புகார் அளித்துள்ளார். தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.
Related Tags :
Next Story