சந்திரயான்-2 விண்கலம் ஏவப்படுவதை பொதுமக்கள் நேரில் பார்க்கலாம் : இன்று முதல் ஆன்லைனில் முன்பதிவு
ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ்தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் இருந்து சந்திரயான்-2 விண்கலம் விண்ணில் ஏவப்படுகிறது.
சென்னை,
இஸ்ரோ விஞ்ஞானிகள் இதுகுறித்து கூறியதாவது:-
ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ்தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் இருந்து வரும் 15-ந் தேதி அதிகாலை 2.51 மணிக்கு ஜி.எஸ்.எல்.வி. மார்க்-3 ராக்கெட் மூலம் சந்திரயான்-2 விண்கலம் விண்ணில் ஏவப்படுகிறது. இதனை நேரில் பார்வையிடுவதற்கு பார்வையாளர்கள் sdsc.shar.gov.in என்ற இணையதள முகவரியில் தங்கள் பெயர், முகவரிகளை பதிவு செய்யும் முறை இன்று முதல் தொடங்குகிறது. இதன்மூலம் பொதுமக்களும் சந்திரயான்-2 விண்கலம் ஏவப்படுவதை பார்வையிட முடியும்.
இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.
Related Tags :
Next Story