கூட்டுறவு சங்கங்களில் தவறு செய்கிறவர்கள் யாரும் நீடிக்க முடியாது : அமைச்சர் செல்லூர் ராஜூ எச்சரிக்கை


கூட்டுறவு சங்கங்களில் தவறு செய்கிறவர்கள் யாரும் நீடிக்க முடியாது : அமைச்சர் செல்லூர் ராஜூ எச்சரிக்கை
x
தினத்தந்தி 4 July 2019 12:18 AM GMT (Updated: 4 July 2019 12:18 AM GMT)

கூட்டுறவு சங்கங்களில் தவறு செய்கிறவர்கள் யாரும் நீடிக்க முடியாது என்று அமைச்சர் செல்லூர் ராஜூ எச்சரிக்கை விடுத்துள்ளார்.

சென்னை, 

தமிழக சட்டசபையில் கூட்டுறவுத்துறை மானியக்கோரிக்கை மீது எம்.எல்.ஏ.க்கள் நேற்று விவாதித்தனர். அவர்களுக்கு பதிலளித்து அந்தத் துறையின் அமைச்சர் செல்லூர் ராஜூ பேசியதாவது:-

தொழில் முனைவோர் கடன், மகளிர் சுய உதவிக் குழுக்கள் கடன், பணிபுரியும் மகளிர் கடன், வீட்டு வசதிக் கடன், வீட்டு அடமானக் கடன், சிறு வணிகக் கடன், மாற்றுத் திறனாளிகள் கடன், பண்ணை சாராக் கடன், தானிய ஈட்டுக் கடன், நகைக் கடன், என, பல்வேறு வகையான கடன்கள் 6.75 கோடி பேருக்கு 3 லட்சத்து 26 ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்கு வழங்கப்பட்டுள்ளது.

இதுவரை, 54 ஆயிரத்து 744 மாற்றுத் திறனாளிகளுக்கு 218 கோடியே, 57 லட்சம் ரூபாய் அளவிற்கு, வட்டியில்லாக் கடன் வழங்கப்பட்டுள்ளது. 14.15 லட்சம் சிறு வணிகர்களுக்கு, 1,586 கோடி ரூபாய் அளவிற்கு, சிறுவணிக கடன் வழங்கப்பட்டுள்ளது.

காஞ்சீபுரம் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி பற்றி தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் அந்த வங்கியின் போரூர் கிளையில் சிறுவணிகக் கடனாக ரூ.3.54 கோடி அளவுக்கு 363 கூட்டுறவு பொறுப்புக் குழுக்களுக்கு கடன் வழங்கியதில் கடந்த 2010-ம் ஆண்டு ஏப்ரல் 1-ந்தேதி முதல் 2011-ம் ஆண்டு மார்ச் 31-ந்தேதிவரை முறைகேடு நடந்தது. அது எந்த ஆட்சிக்காலம் என்பதை நான் சொல்ல வேண்டியதில்லை.

அதுபோல அதே கிளையில் நகைக்கடன் வழங்கியதில் கடந்த 2007-ம் ஆண்டு டிசம்பர் 7-ந்தேதி முதல் 2011-ம் ஆண்டு மார்ச் 7-ந்தேதிவரை முறைகேடுகள் நடந்தன. இதுவும் அவர்களின் ஆட்சியில்தான்.

அதுபோல் பல்லாவரம் கிளையில் நகைக்கடன் வழங்கியதில் 2008-ம் ஆண்டு ஏப்ரல் 1-ந்தேதி முதல் 2011-ம் ஆண்டு மார்ச் 12-ந்தேதிவரை ரூ.71.35 லட்சம் முறைகேடு நடந்தது. இது சம்பந்தப்பட்ட வழக் குகள் கோர்ட்டில் உள்ளன.

அ.தி.மு.க. ஆட்சியில் தனிக்கவனம் செலுத்தப்பட்டு இந்த கூட்டுறவு சங்கங்களில் யாரும் தவறு செய்யாதபடி சட்டம் இயற்றப்பட்டுள்ளது. தவறு செய்கிறவர்கள் யாரும் அந்த சங்கங்களில் நீடித்து இருக்க முடியாது. உடனே மாற்றிவிடுவார்கள். தவறே நடக்காத அளவுக்கு துறை ரீதியாக நடவடிக்கைகள் மாற்றி அமைக்கப்பட்டுள்ளன.

இவ்வாறு அவர் பேசினார். 

Next Story