16 நிறுவனங்களுக்கு காணொலிக் காட்சி மூலம் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அடிக்கல் நாட்டினார்


16 நிறுவனங்களுக்கு காணொலிக் காட்சி மூலம் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அடிக்கல் நாட்டினார்
x
தினத்தந்தி 4 July 2019 12:28 PM IST (Updated: 4 July 2019 12:28 PM IST)
t-max-icont-min-icon

உலக முதலீட்டாளர் மாநாட்டில் ஒப்பந்தமிடப்பட்ட 16 நிறுவனங்களுக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி காணொலிக் காட்சி மூலம் அடிக்கல் நாட்டினார்.

சென்னை,

உலக முதலீட்டாளர் மாநாட்டில் 3 லட்சத்து 40 ஆயிரம் கோடி ரூபாய் முதலீடுகள் ஈர்க்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், 2515 கோடி ரூபாய் முதலீட்டிலான 16 நிறுவனங்களுக்கு சென்னை தலைமைச் செயலகத்தில் இருந்தபடி காணொலிக் காட்சி மூலம் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அடிக்கல் நாட்டினார்.

இந்த நிறுவனங்கள் மூலம் 9 ஆயிரத்து 304 பேருக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. நிகழ்ச்சியில் தொழில்துறை அமைச்சர் எம்சி.சம்பத் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Next Story