இளைஞர் அணி செயலாளராக பொறுப்பேற்றுள்ள உதயநிதி ஸ்டாலினுக்கு குவியும் வாழ்த்துக்கள்
திமுக இளைஞர் அணி செயலாளராக பொறுப்பேற்றுள்ள உதயநிதி ஸ்டாலினுக்கு வாழ்த்துக்கள் குவிகிறது.
சென்னை
தமிழக சட்டப்பேரவையில் திமுக எம்.எல்.ஏ. அன்பில் மகேஷ் பேசும்போது கூறியதாவது:-
நாட்டிலேயே இளைஞர் அணியை முதன்முதலில் கொண்டு வந்தது திமுக தான். திமுக இளைஞர் அணி செயலாளராக பொறுப்பேற்றுள்ள என் ஆருயிர் நண்பன் உதயநிதிக்கு வாழ்த்துக்கள் என கூறினார்.
திமுக இளைஞரணி செயலாளராக நியமிக்கப்பட்டுள்ள உதயநிதி ஸ்டாலினுக்கு மதிமுக பொதுச்செயலாளர் வைகோ வாழ்த்து தெரிவித்தார். திமுக இளைஞரணியை மிகத்திறம்பட உதயநிதி ஸ்டாலின் வழிநடத்தி செல்வார் என வைகோ கூறினார்.
திமுக இளைஞரணி செயலாளராக நியமிக்கப்பட்டுள்ள உதயநிதி ஸ்டாலினுக்கு வாழ்த்து - தங்க தமிழ்ச்செல்வன்
திமுக இளைஞரணி செயலாளராக உதயநிதி நியமிக்கப்பட்டுள்ளது மகிழ்ச்சியளிக்கிறது - மார்க். கம்யூ. மாநில செயலாளர் பாலகிருஷ்ணன்
திமுக இளைஞரணி செயலாளராக நியமிக்கப்பட்டுள்ள உதயநிதி ஸ்டாலினுக்கு வாழ்த்து - இந்திய கம்யூ. மாநில செயலாளர் முத்தரசன்
"உதயநிதி ஸ்டாலின் நியமனத்தை வாரிசு அரசியல் என சொல்லமுடியாது!" அனைத்து இடங்களிலும் வாரிசுகள் உள்ளனர். தொண்டர்களை உற்சாகப்படுத்தவே உதயநிதி ஸ்டாலின் நியமனம் செய்யபட்டு உள்ளார் என கூறினார் ஜெ.அன்பழகன்.
நாடாளுமன்ற தேர்தல் வெற்றிக்கு உதயநிதி ஸ்டாலினும் ஒரு காரணம் - அணைக்கட்டு எம்.எல்.ஏ நந்தகுமார்
Related Tags :
Next Story