மதுபானம் அருந்துவோர் அளவாக குடித்தால், பிரச்சினை இல்லை -அமைச்சர் தங்கமணி


மதுபானம் அருந்துவோர் அளவாக குடித்தால், பிரச்சினை இல்லை -அமைச்சர் தங்கமணி
x
தினத்தந்தி 4 July 2019 4:48 PM IST (Updated: 4 July 2019 4:48 PM IST)
t-max-icont-min-icon

மதுபானம் அருந்துவோர் அளவாக குடித்தால், பிரச்சினை இல்லை என மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை மானியக்கோரிக்கை மீதான விவாதத்தில் அமைச்சர் தங்கமணி குறிப்பிட்டார்.

சென்னை

சட்டப்பேரவையில் மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை மானியக்கோரிக்கை மீதான விவாதத்தில் பேசிய காங்கிரஸ் எம்எல்ஏ பிரின்ஸ், மதுபானங்களின் தரம் குறைவாக உள்ளதாகவும், இதனால் உயிரிழப்பு ஏற்படுவதாகவும் குற்றம்சாட்டினார்.

இதற்கு பதிலளித்த அமைச்சர் தங்கமணி, உடனடியாக அனைத்து மதுக்கடைகளையும் மூடினால் கள்ளச்சாராயம் புகுந்துவிடும் என்பதாலேயே, படிப்படியாக மதுக்கடைகள் குறைக்கப்பட்டு வருவதாக அமைச்சர் தங்கமணி தெரிவித்தார்.

தமிழ்நாட்டில் 6 ஆயிரத்து 132 ஆக இருந்த மதுக்கடைகளின் எண்ணிக்கை 5 ஆயிரத்து 152 கடைகளாக குறைக்கப்பட்டிருப்பதை அமைச்சர் சுட்டிக்காட்டினார்.

மதுபானம் அருந்துவோர் அளவாக குடித்தால் பிரச்சினை இல்லை என்றும், அளவுக்கு அதிகமாக குடித்தால் உடல்நலம் கெட்டுப்போகத் தான் செய்யும் என்றும் அமைச்சர் தங்கமணி கூறினார்.

டாஸ்மாக் மேற்பார்வையாளர்கள், விற்பனையாளர்கள் மற்றும் உதவி விற்பனையாளர்களுக்கு மாத தொகுப்பூதியம் ரூ.2,000 கூடுதலாக வழங்கப்படும் என அமைச்சர் தங்கமணி கூறினார்.

Next Story