உயர் அதிகாரிகளின் பாலியல் தொல்லை காரணமாக பெண் ராஜினாமா செய்தாரா? -விளக்கமளிக்க மாநில மனித உரிமை ஆணையம் உத்தரவு
உயர் அதிகாரிகளின் பாலியல் தொல்லை காரணமாக பெண் ராஜினாமா செய்தாரா என விளக்கமளிக்க மாநில மனித உரிமை ஆணையம் உத்தரவிட்டு உள்ளது.
சென்னை,
சென்னை பெருநகர வளர்ச்சி குழுமத்தில் பணியாற்றி வரும் மூத்த திட்ட அதிகாரி ஒருவர், புதிதாக வேலைக்கு சேர்ந்த பெண்ணை தன்னுடைய ஆசைக்கு இணங்குமாறு கூறி வாட்ஸ் அப் மூலம் செய்தி அனுப்பியுள்ளார்.
இதுதொடர்பாக உயர் அதிகாரிகளிடம் அந்த பெண் புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாததால் அந்த பெண் வேலையை ராஜினாமா செய்தார். இதுதொடர்பாக ஊடகங்களில் வெளியான செய்தியை தொடர்ந்து தமிழ்நாடு மாநில மனித உரிமை ஆணைய உறுப்பினர் துரை ஜெயச்சந்திரன், தாமாக முன் வந்து வழக்கை விசாரணைக்கு எடுத்துள்ளார்.
அந்த வழக்கில் உச்சநீதிமன்ற உத்தரவுபடி, சி.எம்.டி.ஏ-வில் விசாகா குழு அமைக்கப்பட்டுள்ளதா? பாலியல் துன்புறுத்தலால் பாதிக்கப்பட்டவர்கள் யாரும் புகார் அளித்துள்ளார்களா? என்றும், இதில் தொடர்புடைய பெண் மற்றும் பாலியல் தொந்தரவு கொடுத்த அதிகாரி யார் என உறுப்பினர் செயலர் விசாரித்தாரா? பாதிக்கப்பட்ட பெண் ராஜினாமா செய்ய வற்புறுத்தப்பட்டாரா? என்பது உள்ளிட்ட கேள்விகளை எழுப்பியுள்ளார். இந்த கேள்விகள் தொடர்பாக தமிழக வீட்டு வசதி துறை செயலாளர் மற்றும் சென்னை சி.எம்.டி.ஏ. உறுப்பினர் செயலர் ஆகியோர் 4 வாரத்தில் அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டுள்ளார்.
Related Tags :
Next Story