பால் விலை உயர வாய்ப்புள்ளதாக முதல்வர் பழனிச்சாமி சட்டப்பேரவையில் சூசக தகவல்


பால் விலை உயர வாய்ப்புள்ளதாக முதல்வர் பழனிச்சாமி சட்டப்பேரவையில் சூசக தகவல்
x
தினத்தந்தி 5 July 2019 3:09 PM IST (Updated: 5 July 2019 3:09 PM IST)
t-max-icont-min-icon

சட்டமன்ற கூட்டத்தொடருக்கு பின் ஆவின் பால் விலை உயர்த்தப்படும் என முதலமைச்சர் சூசக தகவல் தெரிவித்துள்ளார்.

சென்னை

5 ஆண்டுகளாக பால் உற்பத்தியாளர்களுக்கு பால் கொள்முதல் விலை உயர்த்தப்படவில்லை என திமுக உறுப்பினர்கள் பேசினர்.

இதற்கு பதில் அளித்து முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பேசியதாவது:-

பால் உற்பத்தியாளர்களுக்கு விலையை உயர்த்தி தர அரசு தயார். பால்  உற்பத்தியாளர்களுக்கு பால் கொள்முதல் விலையை உயர்த்தி வழங்குவது பற்றி அரசு ஆலோசித்து வருகிறது. நடப்பு சட்டப்பேரவை கூட்டத்தொடரிலேயே அறிவிப்பு வெளியிடப்படும். பால் கொள்முதல் விலை உயர்த்தினால் பால் நுகர்வோர்களுக்கான விலையையும் உயர்த்தினால் தான் சரியாக இருக்கும் என கூறினார்.

Next Story