சட்டப்பேரவை கூட்டத்தொடர் ஜூலை 20-ம் தேதியுடன் முடிகிறது


சட்டப்பேரவை கூட்டத்தொடர் ஜூலை 20-ம் தேதியுடன் முடிகிறது
x
தினத்தந்தி 5 July 2019 3:21 PM IST (Updated: 5 July 2019 3:21 PM IST)
t-max-icont-min-icon

தமிழக சட்டப்பேரவை கூட்டத் தொடர் ஜூலை 20-ம் தேதியுடன் முடிகிறது.

சென்னை,

தமிழக சட்டப்பேரவையில் கடந்த பிப்ரவரி மாதம் 8-ம் தேதி 2019 -20ம் ஆண்டுக்கான பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டு நிறைவேற்றப்பட்டது. இதையடுத்து மக்களவைத் தேர்தல் நெருங்கியதால், பட்ஜெட் மீதான விவாதத்துக்குப் பிறகு மானியக் கோரிக்கைகள் மீதான விவாதம் நடைபெறாமலேயே பேரவை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டது.

தேர்தல் முடிந்த நிலையில், துறை வாரியாக மானியக் கோரிக்கைகள் தாக்கல் செய்யப்பட்டு நிதி ஒதுக்கீட்டுக்கு ஒப்புதல் பெறுவதற்காக, சட்டப்பேரவைக் கூட்டத்தொடர் ஜூன் 28-ம் தேதி தொடங்கி நடைபெற்று வந்தது. பல்வேறு துறைகளுக்கான மானிய கோரிக்கைகள் குறித்து சட்டப்பேரவையில் விவாதம் நடைப்பெற்றது. முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி 110 விதியின் கீழ் பல்வேறு திட்டங்களை அறிவித்துள்ளார்.

இந்நிலையில், சபாநாயகர் தனபால் தலைமையில் அலுவல் ஆய்வுக்குழு நடைப்பெற்றது. இந்த கூட்டத்தில் வேலூர் மக்களவை தேர்தல் காரணமாக, சட்டப்பேரவை கூட்டத்தொடரை வரும் 20-ம் தேதியுடன் நிறைவு செய்ய அலுவல் கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டது. இதனையொட்டி சட்டப்பேரவை கூட்டத் தொடர் ஜூலை 20-ம் தேதியுடன் முடிகிறது.

Next Story