ஆட்சியில் இருப்பவர்கள் செய்ய வேண்டிய வேலையை எதிர்க்கட்சியான திமுக செய்கிறது - மு.க.ஸ்டாலின் பேச்சு
ஆட்சியில் இருப்பவர்கள் செய்ய வேண்டிய வேலையை எதிர்க்கட்சியான திமுக செய்கிறது என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பேசினார்.
சென்னை,
சென்னை சைதாப்பேட்டையில் திமுக சார்பில் நடைபெற்ற மழைநீர் சேகரிப்பு திட்ட தொடக்க விழாவில் ஸ்டாலின் பேசியதாவது:-
குடிப்பதற்கே தண்ணீர் இல்லாமல், தமிழகம் முழுவதும் காலி குடங்களுடன் பொதுமக்கள் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். திமுகவின் நாடாளுமன்ற வெற்றியை பொறுத்துக் கொள்ளாமல் என்ன செய்ய போகிறார்கள் எனக் கேட்டனர். ஆனால் பதவியேற்ற முதல் நாளே திமுக எம்.பி.க்கள் சாதனை படைத்தனர்.
ஆட்சியில் இருப்பவர்கள் செய்ய வேண்டிய வேலையை எதிர்க்கட்சியான திமுக செய்கிறது. தண்ணீர்ப் பஞ்சம் குறித்து அரசுக்கு எச்சரிக்கை விடுத்தும் அரசு அதைக் கண்டுகொள்ளவில்லை. தமிழக மக்களை கொச்சைப்படுத்திய விவகாரத்தில் கிரண்பேடி பணிந்து மன்னிப்பு கோரியதற்கு திமுக தந்த அழுத்தமே காரணம்.
இவ்வாறு அவர் பேசினார்.
Related Tags :
Next Story