நவீன இந்தியாவை படைக்கும் தொலைநோக்குப் பார்வை கொண்ட மத்திய பட்ஜெட் - துணை முதலமைச்சர் பன்னீர் செல்வம்
நவீன இந்தியாவை படைக்கும் தொலைநோக்குப் பார்வை கொண்ட மத்திய பட்ஜெட் என்று துணை முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் தெரிவித்துள்ளார்.
சென்னை,
பாராளுமன்றத்தில் மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் இன்று 'மத்திய பட்ஜெட்'டை தாக்கல் செய்தார்.
இது குறித்து துணை முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில்.
இளைஞர்களுக்கு புதிய வாய்ப்புகளை உருவாக்கி, நவீன இந்தியாவை படைக்கும் தொலைநோக்குப் பார்வை கொண்டதாக மத்திய பட்ஜெட் உள்ளது. ஏழ்மையை ஒழித்து வளர்ச்சியை ஊக்குவிக்கும் தொலைநோக்குப் பார்வையுடன் பட்ஜெட் தயாரிக்கப்பட்டுள்ளது, பிரதமர் மோடி மற்றும் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு தமிழக மக்கள் சார்பாக பாராட்டுக்கள்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Related Tags :
Next Story