மீன் உணவு திருவிழா: சென்னையில் கடல் மீன் உணவகம்- அமைச்சர் டி.ஜெயக்குமார் அறிவிப்பு
தமிழக சட்டசபையில் மீன்வளத்துறை மானியக்கோரிக்கை மீது நேற்று விவாதம் நடந்தது. பின்னர் இதற்கு அமைச்சர் டி.ஜெயக்குமார் பதிலளித்து பேசினார்.
சென்னை,
அமைச்சர் டி.ஜெயக்குமார் அப்போது கூறுகையில், ‘சென்னையில் நவீன கடல் மீன் உணவகம் மற்றும் இரண்டு மீன் விற்பனை நிலையங்கள் நிறுவப்படும். மீன் உணவின் பயன்கள் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்த சென்னையில் மீன் உணவு திருவிழா நடத்தப்படும்’ என்று கூறினார்.
மேலும் திருவள்ளூர், சென்னை, காஞ்சீபுரம் மாவட்டங்களில் 30 இடங்களில் செயற்கை மீன் உறைவிடங்கள் அமைக்கப்படும் என்று கூறிய அமைச்சர் டி.ஜெயக்குமார், தஞ்சாவூர், கடலூர், ஈரோடு, கன்னியாகுமரி, மதுரை மாவட்டங்களில் நீர்வாழ் உயிரின வளர்ப்பு சேவை மையங்கள் நிறுவப்படும் என்றும் தெரிவித்தார்.
இயற்கை இடர்பாடுகளில் சேதமடையும் மீன்பிடி படகுகள் மற்றும் உபகரணங்கள் காப்புறுதி திட்டத்தின் கீழ் கொண்டு வரப்படும் எனவும், திருவள்ளூர் மாவட்டம் பழவேற்காடு ஏரியின் மீன் உற்பத்தியை அதிகரிக்க பல்வேறு இன மீன் குஞ்சுகள் இருப்பு செய்யப்படும் என்றும் குறிப்பிட்டார்.
Related Tags :
Next Story