உலகத் தமிழாராய்ச்சி மாநாட்டிற்கு தமிழக அரசு ஒரு கோடி ரூபாய் நிதி ஒதுக்கி அரசாணை
அமெரிக்காவின் சிகாகோ நகரில் நடைபெறும் உலகத் தமிழாராய்ச்சி மாநாட்டிற்கு தமிழக அரசு ஒரு கோடி ரூபாய் நிதி ஒதுக்கி அரசாணை வெளியிட்டுள்ளது.
சென்னை
பத்தாவது உலகத் தமிழாராய்ச்சி மாநாடானது ஜூலை 4ஆம் தேதி தொடங்கி நாளை வரை சிகாகோ நகரில் நடைபெறுகிறது. இந்த மாநாட்டை நடத்த நிதி உதவி கோரி, உலக தமிழ் ஆராய்ச்சி மன்றம், தமிழக அரசுக்கு கோரிக்கை வைத்தது. இதன் அடிப்படையில், மாநாட்டிற்கு ஒரு கோடி ரூபாய் நிதி ஒதுக்கி தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
இதேபோல் இந்த மாநாட்டில் தமிழக அரசின் சார்பில் பங்கேற்கும் 20 பேர், சிகாகோ சென்று வர விமானக் கட்டணம் உள்ளிட்ட பிற செலவினங்களுக்கு 60 லட்சத்து 9 ஆயிரம் ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் அரசாணையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
Related Tags :
Next Story