தமிழக காவல்துறை டிஜிபி திரிபாதி உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை


தமிழக காவல்துறை டிஜிபி திரிபாதி உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை
x
தினத்தந்தி 6 July 2019 4:17 PM IST (Updated: 6 July 2019 4:17 PM IST)
t-max-icont-min-icon

கோவை காவலர் பயிற்சி பள்ளியில் தமிழக காவல்துறை டிஜிபி திரிபாதி உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்டார்.

கோவை

மேற்கு மண்டலத்திற்குட்பட்ட தருமபுரி, கிருஷ்ணகிரி, சேலம் உட்பட 8 மாவட்டங்களை சேர்ந்த காவல் கண்காணிப்பாளர்கள், கோவை, திருப்பூர், சேலம் மாநகர ஆணையாளர்கள், கோவை மற்றும் சேலம் சரக டி.ஐ.ஜி.கள், மேற்கு மண்டல ஐ.ஜி. ஆகியோருடன் டிஜிபி திரிபாதி ஆலோசனை நடத்தினார்.

அப்போது எட்டு மாவட்டங்களின் சட்டம் ஒழுங்கு பிரச்சினை, கோவையில் என்.ஐ.ஏ. அதிகாரிகளின் தொடர் சோதனைகள், கோவை பொள்ளாச்சி உள்ளிட்ட பகுதிகளில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் குறித்து விவாதிக்கப்பட்டது.

மேலும் விபத்துகள், கொள்ளை, வழிபறி சம்பவங்கள் உள்ளிட்டவற்றை தடுப்பது குறித்தும் விவாதிக்கப்பட்டு ஆலோசனைகளும் வழங்கப்பட்டது.

Next Story