“சமூக செயற்பாட்டாளர் முகிலனை நேரில் பார்த்தேன்” பள்ளி தோழர் சண்முகம் பரபரப்பு தகவல்


“சமூக செயற்பாட்டாளர் முகிலனை நேரில் பார்த்தேன்” பள்ளி தோழர் சண்முகம் பரபரப்பு தகவல்
x
தினத்தந்தி 6 July 2019 9:45 PM IST (Updated: 6 July 2019 9:45 PM IST)
t-max-icont-min-icon

திருப்பதியில் முகிலை நேரில் பார்த்தேன் என்று அவரது பள்ளி தோழர் சண்முகம் தெரிவித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

சென்னை,

சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் காணாமல் போன சமூக செயற்பாட்டாளர் முகிலனை திருப்பதியில் பார்த்ததாக அவருடைய பள்ளித் தோழர் தகவல் தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

சமூக செயற்பாட்டாளர் முகிலன் காணாமல் போன வழக்கை சிபிசிஐடி விசாரித்து வரும் நிலையில், முகிலனை திருப்பதியில் பார்த்ததாக அவருடைய பள்ளித் தோழர் சண்முகம் தெரிவித்துள்ளார்.

பிப்ரவரி மாதம் எழும்பூர் ரெயில் நிலையம் சென்ற முகிலனை அதன் பின்னர் காணவில்லை. இது தொடர்பாக  சிபிசிஐடி போலீசார் விசாரித்து வருகின்றனர். 

சமூக செயற்பாட்டாளர் முகிலனின் பள்ளித்தோழர் சண்முகம் தெரிவித்துள்ள தகவலின்படி,

முகிலனை நேரில் பார்த்த தகவலை அவரது மனைவியிடன் கூறினேன். முகிலன் ஆந்திர காவல்துறையினர் பாதுகாப்பில் கொண்டு செல்லப்பட்டதை பார்த்தேன். முகிலன்  தாடியுடன் காணப்பட்டார். சிபிசிஐடி உடனடியாக ஆந்திர காவல்துறையை அணுக வேண்டும் என்றார்.

அதனைத் தொடர்ந்து சமூக செயற்பாட்டாளர்  ஹென்றி டிபேன் கூறுகையில், 

முகிலன் உயிருடன் பார்த்தாக செய்தி கிடைத்திருப்பது மகிழ்ச்சி. ஆந்திர காவல்துறை வசம் உள்ள முகிலனை மீட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த வேண்டும். முகிலனை மீட்டுக்கொண்டு வரும் வாய்ப்பை தமிழக காவல்துறை விட்டுவிடக்கூடாது.  முகிலனை உயிருடன் இருப்பதாக வந்த தகவலை அடுத்து டிஜிபி, சிபிசிஐடியை தொடர்பு கொண்டேன் என்றார்.

இதனைதொடர்ந்து முகிலன் திருப்பதியில் இருப்பதாக தகவல் வெளியானதையடுத்து முகிலன் திருப்பதியில் இருக்கிறாரா என்பதை விசாரித்து தெரிவிக்க ஆந்திர போலீசிடம் சிபிசிஐடி உதவிக்கோரியது.

Next Story