போராட்டங்களை முடக்குவதற்காக ‘முகிலன் மீது பொய் வழக்கு போட்டு அவமானப்படுத்துகிறார்கள்' மனைவி பரபரப்பு பேட்டி


போராட்டங்களை முடக்குவதற்காக ‘முகிலன் மீது பொய் வழக்கு போட்டு அவமானப்படுத்துகிறார்கள் மனைவி பரபரப்பு பேட்டி
x
தினத்தந்தி 8 July 2019 4:49 AM IST (Updated: 8 July 2019 4:49 AM IST)
t-max-icont-min-icon

முகிலன் நடத்தும் போராட்டங்களை முடக்குவதற்காக அவர் மீது பொய் வழக்கு போட்டு அவமானப்படுத்துகிறார்கள் என்று முகிலனின் மனைவி பரபரப்பாக பேட்டி அளித்தார்.

சென்னை,

சமூக ஆர்வலர் முகிலனின் மனைவி பூங்கொடி நேற்று மாலை சென்னை சி.பி.சி.ஐ.டி. தலைமை அலுவலகத்தில் வைத்து நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் அவர் கூறியதாவது:-

எனது கணவர் நடத்தும் போராட்டங்களை முடக்குவதற்காக அவர் மீது போலீசார் பொய் வழக்கு போட்டுள்ளனர். அவர் அவமானப்படுத்தப்பட்டுள்ளார். அவரை கடத்தி சென்று சிறை வைத்து அடித்து துன்புறுத்தியுள்ளனர். கடத்திய நபர்கள் எனது கணவரின் கண்களை கட்டி கடத்தி சென்றிருக்க வேண்டும் என்று கருதுகிறேன். அவரது உடல்நிலை பாதிக்கப்பட்டுள்ளது. அவர் மெலிந்து காணப்படுகிறார். அவர் இயல்பான மனநிலையில் இல்லை.

இந்த அரசின் மீது நம்பிக்கை இல்லை. எனது கணவரின் உயிருக்கு ஆபத்து உள்ளது. அவருக்கு எதுவும் நடக்கலாம். அவரை நாய் கடித்துள்ளது.

உடல்நலம் பாதிக்கப்பட்டுள்ள அவரை உடனடியாக மருத்துவமனையில் சேர்த்து சிகிச்சை அளிக்க ஏற்பாடு செய்ய வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Next Story