மாநில செய்திகள்

சென்னையில் பெட்ரோல் விலை மாற்றமின்றி விற்பனை + "||" + Petrol prices unchanged in Chennai

சென்னையில் பெட்ரோல் விலை மாற்றமின்றி விற்பனை

சென்னையில் பெட்ரோல் விலை மாற்றமின்றி விற்பனை
சென்னையில் பெட்ரோல் நேற்றைய விலையில் மாற்றமின்றி இன்று விற்பனை செய்யப்படுகிறது.
சென்னை,

எண்ணெய் நிறுவனங்கள் பெட்ரோல் மற்றும் டீசல் விலையை தினந்தோறும் என்ற அடிப்படையில் நிர்ணயித்து விற்பனை செய்ய மத்திய அரசு அனுமதி வழங்கியது.

கடந்த ஆண்டு முதல் அமலுக்கு வந்த இந்த நடைமுறையால் இவற்றின் விலை தொடர்ந்து உயர்ந்து கொண்டே சென்றது.  இதில், பெட்ரோல் விலை ரூ.85க்கும் கூடுதலாக விற்பனை செய்யப்பட்டு வாகன ஓட்டிகளுக்கு பெரும் அதிர்ச்சியையும், அதிருப்தியையும் ஏற்படுத்தியது.  இதன்பின் பெட்ரோல் விலை சற்று குறைய தொடங்கியது.

இந்நிலையில், மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் கடந்த 5ந்தேதி நாடாளுமன்ற மக்களவையில் 2019ம் ஆண்டுக்கான பட்ஜெட்டை தாக்கல் செய்தார்.  இதில் எண்ணெய் பொருட்களுக்கான கலால் வரியை உயர்த்தி அறிவிப்பு வெளியானது.  இதனால் சென்னையில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை கடுமையாக உயர்வடைந்தது.

இதன்படி, சென்னையில் பெட்ரோல் விலை லிட்டர் ஒன்றுக்கு ரூ.2.57 உயர்ந்து ரூ.75.76க்கும், டீசல் விலை ரூ.2.52 உயர்ந்து ரூ.70.48க்கும் நேற்று முன்தினம் விற்பனை செய்யப்பட்டது.  பட்ஜெட்டில் கலால் வரி உயர்த்தப்பட்டு புதிய சாலை மேம்பாட்டு வரி விதிக்கப்பட்ட நிலையில் இந்த விலை உயர்வு ஏற்பட்டது.  இந்நிலையில், சென்னையில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை, நேற்று எந்தவித மாற்றமின்றி விற்பனை செய்யப்பட்டது.

சென்னையில் இன்று பெட்ரோல் விலையில் மாற்றமின்றி லிட்டர் ஒன்றுக்கு ரூ.75.76க்கும், டீசல் விலை நேற்றைய விலையை விட ரூ.14 காசு குறைந்து ரூ.70.34க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

1. பெட்ரோல், டீசல் விலையில் மாற்றம் எதுவும் இல்லை
பெட்ரோல், டீசல் விலையில் மாற்றம் எதுவும் இன்றி நேற்றைய விலையிலேயே விற்பனை செய்யப்படுகின்றது.
2. பெட்ரோல், டீசல் விலையில் மாற்றம் எதுவும் இல்லை
பெட்ரோல், டீசல் விலையில் மாற்றம் எதுவும் இன்றி நேற்றைய விலையிலேயே விற்பனையாகிறது.
3. பெட்ரோல் விலை உயர்வு, டீசல் விலையில் மாற்றம் இல்லை
பெட்ரோல் விலை லிட்டருக்கு 6 காசுகள் அதிகரித்து ஒரு லிட்டர் ரூ. 76.09 ஆக விற்பனையாகிறது.
4. பெட்ரோல், டீசல் விலையில் மாற்றம் எதுவும் இல்லை
பெட்ரோல், டீசல் விலையில் மாற்றம் எதுவும் இன்றி நேற்றைய விலையிலேயே விற்பனை செய்யப்படுகின்றது.
5. சென்னையில் பெட்ரோல் விலை உயர்வு
சென்னையில் பெட்ரோல் விலை 19 காசுகள் உயர்ந்து ரூ.75.89க்கு விற்பனை செய்யப்படுகிறது.