அ.தி.மு.க. சார்பில் மாநிலங்களவைக்கு போட்டியிடும் வேட்பாளர்கள் வேட்புனு தாக்கல்


அ.தி.மு.க. சார்பில் மாநிலங்களவைக்கு போட்டியிடும் வேட்பாளர்கள் வேட்புனு தாக்கல்
x
தினத்தந்தி 8 July 2019 1:11 PM IST (Updated: 8 July 2019 1:11 PM IST)
t-max-icont-min-icon

அன்புமணி ராமதாஸ் மற்றும் அ.தி.மு.க. சார்பில் மாநிலங்களவைக்கு போட்டியிடும் வேட்பாளர்கள் வேட்புனு தாக்கல் செய்தனர்.

சென்னை,

தி.மு.க. வேட்பாளர்கள் மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளரான வைகோவும் நேற்று முன்தினம் வேட்புமனு தாக்கல் செய்த நிலையில், அ.தி.மு.க. வேட்பாளர்கள் சந்திரசேகரன், முகமது ஜான்  மற்றும் பா.ம.க. வேட்பாளர் அன்புமணி ராமதாசும் வேட்புமனு தாக்கல் செய்ய இறுதிநாளான இன்று மனுதாக்கல் செய்ய வந்தனர்.

முதல்வர் எடப்பாடி பழனிசாமி மற்றும் துணை முதல்வர்  ஓ.பன்னீர்செல்வம் முன்னிலையில் அன்புமணி ராமதாஸ் உள்ளிட்ட அதிமுக வேட்பாளர்களான முகமது ஜான், சந்திரசேகரன் ஆகியோர் வேட்புமனு தாக்கல் செய்தனர்.

Next Story