முற்பட்ட வகுப்பினருக்கு 10% இடஒதுக்கீடு அரசியல் சாசனத்திற்கு எதிரானது -மு.க.ஸ்டாலின் பேச்சு


முற்பட்ட வகுப்பினருக்கு 10% இடஒதுக்கீடு அரசியல் சாசனத்திற்கு எதிரானது -மு.க.ஸ்டாலின் பேச்சு
x
தினத்தந்தி 8 July 2019 6:59 PM IST (Updated: 8 July 2019 6:59 PM IST)
t-max-icont-min-icon

முற்பட்ட வகுப்பினருக்கு 10% இடஒதுக்கீடு அரசியல் சாசனத்திற்கு எதிரானது என்று அனைத்துக்கட்சி கூட்டத்தில் பங்கேற்ற திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

சென்னை, 

பொருளாதாரத்தில் பின்தங்கிய முற்பட்ட வகுப்பினருக்கு கல்வி மற்றும் வேலைவாய்ப்புகளில் 10 சதவீத இடஒதுக்கீடு வழங்க மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. ஏற்கனவே, சில மாநிலங்களில் இந்த உத்தரவு அமலுக்கு வந்துள்ள நிலையில், தமிழகத்திலும் இதற்கான அரசாணை  வெளியிடப்பட்டுள்ளது. ஆனால், இன்னும் அமல்படுத்தப்படவில்லை.

சென்னை தலைமைச்செயலகத்தில் அனைத்துக் கட்சி கூட்டம்  நடைபெற்று வருகிறது. இந்த கூட்டத்திற்கு முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமை தாங்கினார்.  கூட்டத்தில் துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், சுகாதாரத்துறை அமைச்சர் டாக்டர் விஜயபாஸ்கர், சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின், காங்கிரஸ் சார்பில் கோபண்ணா, விடுதலை சிறுத்தைகள் கட்சி  சார்பில் ரவிக்குமார், மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல் உள்ளிட்டோர் பங்கேற்று உள்ளனர்.

இந்த கூட்டத்தில் பங்கேற்ற திமுக கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் கூறியதாவது :-

காமராஜர், அண்ணா, கருணாநிதி, ஜெயலலிதா என யாருமே இட ஒதுக்கீட்டில் சமரசம் செய்ததில்லை. பொருளாதாரத்தில் நலிந்த முற்பட்ட வகுப்பினருக்கு 10% இடஒதுக்கீடு அரசியல் சாசனத்திற்கு எதிரானது. இட ஒதுக்கீட்டு  கொள்கையை செயல்படுத்துவதில் பிற மாநிலங்களுக்கு தமிழகம் முன்னோடியாக விளங்குகிறது. 

மேலும் மருத்துவ படிப்பில் 25 சதவீதம் தருகிறோம் என்பதை நம்பி, 10 சதவீத இடஒதுக்கீட்டை ஏற்க கூடாது. தமிழகத்தில் கல்வி, வேலைவாய்ப்பில் 69 சதவீத இட ஒதுக்கீடு கடைபிடிக்கப்பட்டு வருகிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story